Wednesday, April 11, 2012

நாட்டின் பாதுகாப்பு குறித்து வரும் 20 ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும் - முப்படை தளபதிகளுக்கு பார்லி. நிலைக்குழு உத்தரவிட்டுள்ளது!

Wednesday,April,11,2012
புது டெல்லி::நாட்டின் பாதுகாப்பு எப்படி உள்ளது என்பது குறித்து வரும் 20 ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும் என்று முப்படை தளபதிகளுக்கு பார்லி. நிலைக்குழு உத்தரவிட்டுள்ளது. முப்படை தளபதிகளை நேரில் ஆஜராக கோரும் இந்த நடவடிக்கை கடுமையானதாக கருதப்படுகிறது. ராணுவத்தின் தளவாட பற்றாக்குறையும், குறைபாடுகளும் இருப்பதாக ராணுவ தளபதி வி.கே. சிங் கூறியதாக செய்திகள் வெளியாகின. மேலும் மத்திய அரசிடம் அனுமதி பெறாமலேயே ராணுவத்தை டெல்லி நோக்கி நகர்த்த வி.கே. சிங் உத்தரவிட்டதாக கூறப்படுகிறது. இந்த சர்ச்சைகள் தொடர்பாக பாதுகாப்பு துறை செயலாளர் சசிகாந்த் ஷர்மா, வி.கே. சிங் ஆகியோரிடம் நாடாளுமன்ற நிலைக்குழு 2 முறை விளக்கம் கேட்டுள்ளது.

இந்த நிலையில் ராணுவம், கடற்படை, விமானப்படை தளபதிகள் வரும் 20 ம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்று கோர விவகாரங்களுக்கான நாடாளுமன்ற குழு முடிவு செய்திருக்கிறது. எனினும் தேவைப்பட்டால் குழு முன் ஆஜராக வேண்டிய தேதி முப்படை தளபதிகளுக்கும் வசதியாக இருக்கும் பொருட்டு மாற்றி அமைக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. ராணுவ படைப் பிரிவுகளின் நடமாட்டம் குறித்து அரசுக்கு முன்கூட்டியே தெரிவிக்க வேண்டிய அவசியம் இல்லை என்கிற கருத்து சரிதான் என்று பாதுகாப்பு துறை செயலர் சசிகாந்த் ஷர்மா இந்த கூட்டத்தில் உறுதி செய்தார். ராணுவம் எந்த வழக்கமான செயல்களையும் மீறி விடவில்லை என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

No comments:

Post a Comment