Friday, March 23, 2012

பிரான்சில் பள்ளி குழந்தைகளை கொன்ற தீவிரவாதி சுட்டு கொலை!

Friday, March 23, 2012
டுலுஸ்::பிரான்சில் பள்ளியில் துப்பாக்கிச் சூடு நடத்திய 3 குழந்தைகளை கொன்ற அல் கய்தா தீவிரவாதியை பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றனர். இதையடுத்து கடந்த 2 நாட்களாக நடந்து வந்த துப்பாக்கிச் சூடு முடிவுக்கு வந்துள்ளது.பிரான்சின் தெற்கு பகுதியில் முகமது மெரா என்ற 23 வயது வாலிபர் திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தினார். அதில் 3 பேர் இறந்தனர். அதன்பின், பள்ளி ஒன்றில் திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தினார். இதில் 3 யூத குழந்தைகள், ஆசிரியை ஒருவர் என 4 பேர் இறந்தனர். ஏழு பேரை படுகொலை செய்த முகமது அல்ஜீரியாவை சேர்ந்தவர். அல் கய்தா தீவிரவாத அமைப்புடன் தொடர்புடையவர் என்று தெரிய வந்தது.

அவரை தேடும் பணியில் பாதுகாப்புப் படையினர் ஈடுபட்டனர். அப்போது டுலுஸ் நகரின் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றின் கீழ்தளத்தில் வாலிபர் தங்கியிருக்கும் தகவல் கிடைத்தது. உடனடியாக அந்த வீட்டை கமாண்டோ வீரர்கள் நேற்றுமுன்தினம் முற்றுகையிட்டனர். சரணடையும்படி முகமதுவிடம் கூறினர். ஆனால், அவர் துப்பாக்கிச் சூடு நடத்தினார். இதனால் பாதுகாப்பு படையினரும் துப்பாக்கிச் சூடு நடத்தினர். சுமார் 30 மணி நேரம் இருதரப்புக்கும் இடையில் சண்டை நடந்தது. விடிய விடிய தாக்குதல் நடத்தி வந்த வீரர்கள், கடைசியில் முகமது மெராவை சுட்டுக் கொன்றனர்.

No comments:

Post a Comment