Pages

Sunday, March 25, 2012

இசை நிகழ்ச்சியின் முடிவில் மோதல்; ஒருவர் பலி!

Sunday, March 25, 2012
இலங்கை::கல்நெவ பிரதேசத்தில் இரண்டு குழுக்களுக்கு இடையில் இடம்பெற்ற மோதலில் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

பிரதேசத்தில் நேற்றிரவு நடைபெற்ற இசை நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்ட குறித்த இரு குழுவினரும் வீட்டிற்கு சென்றுக் கொண்டிருக்கையிலேயே இந்த மோதல் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.

இந்த மோதலில் கத்தியால் குத்தியே இவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய மூன்று சந்தேகநபர்கள் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

சம்பவத்துடன் தொடர்புடைய மற்றுமொரு சந்தேகநபர் தலைமறைவாகியுள்ளதுடன், அவரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

No comments:

Post a Comment