
Monday, March 26, 2012இலங்கை::போரினால் பாதிக்கப்பட்ட பல்கலைக்கழக மாணவர்களுக்கு நிதியுதவி வழங்கும் விசேட செயற்றிட்டம் யாழ் பல்கலைக்கழகம் மற்றும் வடமாகாண கல்வி கலாச்சார விளையாட்டுத்துறை அமைச்சு ஆகியவற்றினால் முன்னெடுக்கப்படுகிறது.
போரினால் பாதிக்கப்பட்டு நலன்புரி நிலையங்களில் தங்கியிருந்தபோதும் தமது கல்வியைத்
தொடர்ந்த 180 மாணவர்களுக்கான உதவித்தொகை வழங்கும் நிகழ்வு வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி தலைமையில் யாழ்ப்பாணத்திலுள்ள உப அளுநர் அலவலகத்தில் நடந்தது.
ஆளுநர் உதவித்தொகையை வழங்குவதைப் படத்தில் காணலாம். வடமாகாண ஆளுநரின் செயலாளர் இ.இளங்கோவன், வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எஸ்.சத்தியசீலன், வடமாகாண உட்கட்டமைப்பு அபிவிருத்தி மற்றும் மீள்நிர்மாணம் அமைச்சின் செயலாளர் ஏ.ஈ.எஸ்.ராஜேந்திரா, பிரதிப் பிரதம செயலாளர்(நிதி) ஏ.மனோரஞ்சன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment