Pages

Monday, March 26, 2012

இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையிலான உறவுகளில் சில ஏற்றத்தாழ்வுகள் ஏற்பட்டுள்ளதனை மறுப்பதற்கில்லை – ஜீ.எல்.பீரிஸ்!

Monday, March 26, 2012
இலங்கை::இந்தியாவின் தீர்மானம் இலங்கைக்கு பாதக விளைவுகளை ஏற்படுத்தியதாக வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்திற்கு இந்தியா ஆதரவளிக்கக் கூடும் என அந்நாட்டு பிரதமர் மன் மோகன் சிங்கினால் வெளியிடப்பட்ட கருத்து, இலங்கைக்கு பாதகமாக அமைந்தது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவின் இந்த அறிவிப்பு, இலங்கைக்கு ஆதரவாக வாக்களிக்கத் தயாராக இருந்த பல நாடுகளின் தீர்மானத்தில் மாற்றத்தை ஏற்படுத்தியது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கைக்கு சார்பாக வாக்களிக்கத் தயாராகியிருந்த பால நாடுகள் வாக்களிப்பில் கலந்து கொள்ளவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையிலான உறவுகளில் சில ஏற்றத்தாழ்வுகள் ஏற்பட்டுள்ளதனை மறுப்பதற்கில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்...

மேர்வின் சில்வாவின் கருத்து கண்டனத்திற்குரியது – ஜீ.எல்.பீரிஸ்!

பொதுமக்கள் தொடர்பு அமைச்சர் மேர்வின் சில்வாவின் கருத்து கண்டனத்திற்குரியது என வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

இவ்வாறான கருத்துக்களை அனுமதிக்க முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் கலந்து கொண்ட மனித உரிமை செயற்பாட்டாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்களின் கை கால்களை உடைக்கப் போவதாக அமைச்சர் அண்மையில் கருத்து வெளியிட்டிருந்தார்.

எந்த சந்தர்ப்பத்திலும் வன்முறைகளுக்கு இடமளிக்க முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சரியாக சிந்திக்கும் எவரும் இவ்வாறான கருத்துக்களை அனுமதிக்க மாட்டார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.

எவ்வாறெனினும், தனிப்பட்ட ஓர் நபரின் கருத்துக்களை அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ நிலைப்பாடாக சர்வதேச ஊடகங்கள் திரிபுபடுத்தக் கூடாது என அவர் கோரியுள்ளார்.

மனித உரிமை செயற்பாட்டாளர்கள் போலியான குற்றச்சாட்டுக்களை சுமத்தி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment