Sunday, March 25, 2012

கடனட்டை மோசடியில் ஈடுபட்ட இலங்கை பிரஜை ஒருவரை கைது செய்வதற்கான விசாரணைகளை இந்திய மத்திய குற்றப் புலனாய்வு பிரிவு ஆரம்பித்துள்ளது!

Sunday, March 25, 2012
சென்னை::கடனட்டை மோசடியில் ஈடுபட்ட இலங்கை பிரஜை ஒருவரை கைது செய்வதற்கான விசாரணைகளை இந்திய மத்திய குற்றப் புலனாய்வு பிரிவு ஆரம்பித்துள்ளது.

போலியான கடனட்டைகளை உபயோகித்து சுமார் 5 லட்சத்திற்கும் அதிகமான பணத்தை மோசடி செய்துள்ளதாக இவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இவர் மீது 15 முறைபாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவினர் குறிப்பிட்டுள்ளனர்.

இவருக்கு உதவிகளை வழங்கிய இரண்டு இந்திய பிரஜைகளை மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளதாக த ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது.

குறித்த இலங்கை பிரஜை உணவகமொன்றில் உபயோகிக்கப்படும் கடனட்டைகளின் பிரதிகளை பெற்று போலி கடனட்டைகளை தயாரித்து அதனூடாக பணமோசடியில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடனட்டைகளின் பிரதிகளை பெற்றுக் கொடுப்பதற்காக குறித்த நபர், கைது செய்யப்பட்டுள்ள இருவருக்கும் தலா ஆயிரம் ரூபா வீதம் வழங்கியுள்ளதாக மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்

No comments:

Post a Comment