Tuesday, March 27, 2012கொல்கத்தா::இலங்கை தொடர்பாக அமெரிக்கா முன்வைத்த பிரேரணைக்கு ஆதரவாக இந்தியா வாக்களித்தாலும், தொடர்ந்தும் இலங்கையுடன் சுமூகமான உறவுகளைப் பேணுவதாக வெளிநாடு வாழ் இந்தியர் நலத்துறை அமைச்சர் வயலார் ரவி தெரிவித்துள்ளார்.
இறைமையுள்ள நாடு என்ற வகையில் இந்தியாவிற்கு, இலங்கையிலுள்ள தமிழ் மக்களின் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் குரல் எழுப்ப நேரிட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொல்கத்தாவில் இடம்பெற்ற கூட்டமொன்றில் கலந்துகொண்டிருந்த போதே இவர் இந்தக் கருத்துக்களைக் கூறியதாக ரொய்ட்டர் செய்தி வெளியிட்டுள்ளது.
ஆரம்ப காலம் முதல் இலங்கையுடன் நட்புறவு நிலவி வருவதாக சுட்டிக்காட்டிய வயலார் ரவி, இந்திரா காந்தியின் காலத்திலிருந்தே இந்தியா இலங்கைக்கு உதவிகளை வழங்கி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
அவ்வாறு இலங்கைக்கு உதவி வழங்கியமை தொடர்பில் எந்தவொரு பிரச்சினையும் இல்லாத போதும், மனித உரிமை மீறல்கள் இடம்பெறும் போது அதனைப் பார்த்துக்கொண்டிருக்க முடியாது என வெளிநாடு வாழ் இந்திய நலத்துறை அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இத்தகைய மனித உரிமை மீறல்கள் இனிவரும் காலங்களில் இடம்பெறாமல் இருக்கும் வகையில் அவதானிப்புடன் இருக்க வேண்டும், அரசியல் ரீதியாகவும் இந்திய நாட்டு மக்கள் என்ற ரீதியிலும் தமிழ் நாட்டு மக்களின் நிலைப்பாட்டுடன் ஒருமித்து இருக்க வேண்டியது அவசியமாகும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
No comments:
Post a Comment