Pages

Tuesday, March 27, 2012

பிரதியமைச்சர் முரளிதரனின் கூற்றை நாம் முற்றாக மறுக்கின்றோம் – கல்குடா சுதந்திர பட்டதாரிகள் ஒன்றியம்!

Tuesday, March 27, 2012
இலங்கை::பிரதியமைச்சர் விநாயக மூர்த்தி முரளிதரன் மட்டக்களப்பு பட்டதாரிகள் தொடர்பாக கூறியிருக்கும் கூற்றை நாம் முற்றாக மறுக்கின்றோம் என கல்குடா சுதந்திர பட்டதாரிகள் ஒன்றியம் (26.3.2012) மட்டக்களப்பில் நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவ் ஒன்றியத்தின் செயலாளர் தி.தயாரூபன் தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த கல்குடா சுதந்திர பட்டதாரிகள் ஒன்றியத்தின் வெயலாளர் தயாரூபன்,

“கடந்த வாரம் தமிழ் தினசரி பத்திரிகையொன்றில் பிரதியமைச்சர் விநாயக மூர்த்தி முரளிதரன் கல்குடா சுதந்திரக்கட்சியின் அமைப்பாளர் எனக் கூறிக்கொள்ளும் சந்திரபால என்பவர் பட்டதாரிகளிடத்தில் பணம் பெற்று தொழில் தருவதாக கூறி பட்டததரிகளை ஏமாற்றி வருகின்றார்.

இது தொடர்பில் பட்டததரிகள் கவனமாக இருக்க வேண்டுமென ஒரு அறிக்கையை பிரதியமைச்சர் வெளியிட்டிருந்தார்.

இதை நாம் ஏற்றுக்கொள்ளவில்லை. பிரதியமைச்சரின் இக் கருத்து தொடர்பில் எமது வன்மையான கண்டனத்தை தெரிவித்துக்கொள்கின்றோம். பட்டதாரிகள் எவரும் எந்த அரசியல் வாதிகளுக்கும் பணம் கொடுத்து உத்தியோகம் பெற வேண்டிய நிலையில் வேலையற்ற பட்டதாரிகள் இல்லை.

யாருக்கும் நாங்கள் உத்தியொகம் பெறுவதற்காக பணம் எதுவும் கொடுக்கப்படவில்லை என்பதை திட்டவட்டமாக இங்கு கூறி வைக்கின்றோம்.

நாங்கள் பட்டதாரிகள் யாரிடமும் பணம் கொடுத்து வேலை வாங்க வேண்டிய அவசியமுமில்லை. ஜனாதிபதியின் மஹிந்த சிந்தனையின் கீழ் 30,000 பட்டதாரிகளக்கு வேலைவாய்ப்பு வழங்கும் திட்டத்திற்கேற்ப எமது பட்டதாரிகளையும் இணைத்துக்கொண்டு வேலைவாய்ப்பை பெறுவதற்காக எமது அமைப்பை தொடங்கியுள்ளோம். நாங்கள் அரசியல் வாதிகளுமில்லை, எங்களை அரசியல் வாதிகளுடன் இணைத்துக்கொண்டு அரசிலுக்குள் எங்களை இழுக்க வேண்டாம்.

எங்களின் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக ஜனாதிபதியின் வழிகாட்டலில் இணைந்து உத்தியோகத்தை மேற்கொள்வதற்காக வேண்டியே நாங்கள் இந்த ஒன்றியத்திலும் இணைந்துளோம்.

ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் கல்குடாத் தொகுதி அமைப்பாளர் சந்திரபால எங்களில் யாரிடமும் பணம் பெறவில்லை. எங்களுக்காக அவர் முயற்சி செய்து கொண்டிருக்கின்றார். இது வரைகாலமும் நாங்கள் தான் அரசியல் வாதிகளை தேடிச் சென்று வேலைவாயப்புக் கேட்டு வந்தோம்.

இன்றைய கால கட்டத்தில் முதன் முறையாக கல்குடாத்தொகுதி அமைப்பாளர் எங்களிடம் வந்து எங்களின் பிரச்சினைகளை கேட்டு எங்களுக்காக உழத்து வருகின்றார் என அவர் மேலும் தெரிவித்தார்.

இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் இதன் உப செயலாளர் எஸ்.லக்சிமி உட்பட நிருவாக உறுப்பினர்கள் மற்றும் ஒன்றியத்தின் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment