Sunday, March 25, 2012சென்னை::தமிழகத்தில் இருந்து கேரள கடல் வழியாக, ஆஸ்திரேலியாவுக்கு இலங்கைத் தமிழர்கள் திருட்டுத்தனமாக செல்கின்றனர். கண்காணிப்பில் ஈடுபட்ட கியூ பிரிவு போலீசார், புரோக்கர்கள் இருவரை கைது செய்தனர். கடல் பயணத்திற்காக பதுக்கப்பட்டிருந்த, 2,000 லிட்டர் டீசல் பறிமுதல் செய்யப்பட்டது.தமிழகத்தில் உள்ள பல இடங்களில் உள்ள இலங்கைத் தமிழர்கள் முகாமில், ஆயிரக்கணக்கானோர் தங்கியுள்ளனர். இலங்கையில் போர் ஓய்ந்த பின், பலர் இலங்கைக்குச் செல்லத் துவங்கினர். ஒரு சிலர், திருட்டுப் படகில் கொச்சின் வழியாக ஆழ்கடலுக்குச் செல்கின்றனர்.
ஆழ்கடலில் நிறுத்தப்பட்டுள்ள மற்றொரு விசைப்படகில் ஏறி, ஆஸ்திரேலியாவிற்குச் சென்று அகதிகளாக தஞ்சமடைகின்றனர். அங்கேயே நிரந்தரமாக தங்கி, குடியுரிமை உட்பட அனைத்து சலுகைகளையும் பெறும் தகவல் கியூ பிரிவு போலீசாருக்கு கிடைத்தது.படகு பயணத்திற்கு ஒரு குடும்பத்திற்கு 5 லட்ச ரூபாய் வரை, புரோக்கர்கள் பணம் பெற்று வருவதாகத் தெரிகிறது.
இலங்கைத் தமிழர்களை படகில் ஏற்றிக் கொண்டு செல்லும் போது, சாட்டிலைட் போன்கள் மூலம் தகவல் பரிமாற்றம் செய்வதால், போலீசாரின் கண்ணில் இருந்து தப்பி வந்தனர்.கடல் வழியாக கண்காணிப்பை தீவிரப்படுத்திய நாகப்பட்டினம் கியூ பிரிவு போலீசார், படகில் இலங்கைத் தமிழர்களை ஏற்றிச் செல்லும் புரோக்கரான ராஜன் என்ற இத்தாலி ராஜனை, கடந்த வாரம் கைது செய்தார். அவரிடம் இருந்த சாட்டிலைட் போன் சிக்கியது.அதன் தொடர்ச்சியாக , சென்னை மாமல்லபுரம் அருகே கூவாத்தூரில், படகு பயணத்திற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 2,000 லிட்டர் டீசலைபறிமுதல் செய்த போலீசார், ரமேஷ் என்பவரை கைது செய்தனர்.- நமது சிறப்பு நிருபர் -
No comments:
Post a Comment