Pages

Wednesday, March 28, 2012

பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய புலிகளின் முன்னாள் வைத்தியர் கைது!

Wednesday,March,28,2012
இலங்கை::பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய புலிகளின் முன்னாள் வைத்தியர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடக்கு கிழக்கின் பல பாகங்களில் கொள்ளை, கப்பம் கோரல் உள்ளிட்ட ஒப்பந்த அடிப்படையிலான குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்த கும்பல் ஒன்றை, குறித்த வைத்தியர் வழிநடத்தியுள்ளார். இந்த ஆயுதக் கொள்ளைக் குழுவினை திருகோணமலை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இந்தக் கும்பலுடன் தொடர்புடைய ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் இதில் ஒரு பொலிஸ் கான்டஸ்டபிளும் அடங்குவதாகவும் சிங்கள பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

சிரேஸ்ட பொலிஸ் அதிகாரிகள் மற்றும் அரசாங்க உயர் அதிகாரிகளின் இறப்பர் முத்திரைகளைப் பயன்படுத்தி போலி ஆவணங்களை தயாரிப்பதன் மூலமும் இந்தக் கும்பல் பணம் சம்பாதித்துள்ளது.

விசேட அதிரடிப்படையினரின் சீருடைகள், கைத் துப்பாக்கிகள், உயர் பொலிஸ் அதிகாரிகளின் போலி இறப்பர் முத்திரைகள் மற்றும் பல முக்கிய ஆவணங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்களிடம் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

No comments:

Post a Comment