Friday, March 23, 2012

இலங்கைக்கு வான்வழி மற்றும் கடலோர கண்காணிப்பு உபகரணங்களை ஏற்றுமதி செய்வதற்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளை அமெரிக்கா தளர்த்தியது!

Friday, March 23, 2012
ஜெனீவா::இலங்கைக்கு வான்வழி மற்றும் கடலோர கண்காணிப்பு உபகரணங்களை ஏற்றுமதி செய்வதற்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளை அமெரிக்கா தளர்த்தியது.

நேற்றைய தினம் ஜெனீவாவில் இடம்பெற்ற ஐநா மனிதஉரிமைகள் கவுன்சில் கூட்டத் தொடருக்குப் பின்னதாக இந்த கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன.

இதேவேளை இலங்கையில் 2009ஆம் ஆண்டு இடம்பெற்ற இறுதிக்கட்ட யுத்தத்தில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள், போர்க்குற்றங்கள் என்பவற்றுக்கான பரிந்துரைகளை மேற்கொள்ளுமாறும் வலியுறுத்தியுள்ளது.

ஏற்றுமதி கட்டுப்பாடுகள் 1980களில் உள்நாட்டு போர் தொடங்குவதற்கு முன்னரே இலங்கை - அமெரிக்காவிற்கு இடையில் கொண்டுவரப்பட்டன.

புதிய விதிவிலக்குகளின் படி ஆயுதமற்ற ரோந்து படகுகள், ஒளி விமானம், கமராக்கள், மற்றும் இவற்றுடன் இணைந்த பொருட்கள் என்பன ஏற்றுமதிக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளன.

No comments:

Post a Comment