Tuesday, March 27, 2012

இந்தியாவிற்கு ரஷ்யா கண்டனம்! இலங்கை தொடர்பான பிரேரணைக்கு ஆதரவாக இந்தியா வாக்களித்தமைக்கு ரஷ்யா கண்டனம்!

Tuesday, March 27, 2012
சென்னை::ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பான பிரேரணைக்கு ஆதரவாக இந்தியா வாக்களித்தமைக்கு, ரஷ்யா கண்டனம் வெளியிட்டுள்ளது.

ரஷ்யாவின் இந்தியாவுக்கான தூதுவர் எலக்ஷேன்டர் எம். கடாகின் இதனைத் தெரிவித்துள்ளார்.

புதுடில்கியில் இடம்பெற்ற மாநாடு ஒன்றில் உரையாற்றும் போது கருத்து வெளியிட்ட அவர், நேரடியாக இந்தியாவை விமர்சிக்காத போதிலும், இந்தியா இந்த பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்தமை அரசியல் ரீதியான நோக்கத்தை அடிப்படையாக கொண்டது என சுட்டிக்காட்டினார்.

இன்னொரு நாட்டின் சுயநிர்ணய உரிமையில் மற்றுமொரு நாடு தாக்கம் செலுத்துவதை ரஷ்யா ஒருபோதும் ஏற்றுக் கொள்ளாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

No comments:

Post a Comment