Pages

Friday, March 23, 2012

ஐ.நா.மனிதஉரிமை கமிஷனில் அமெரிக்கா கொண்டுவந்த தீர்மானத்துக்கு ஆதரவாக, இந்தியா ஓட்டளித்ததற்கு:பிரதமருக்கும்,சோனியாவுக்கும் கருணாநிதி நன்றி தெரிவித்துள்ள

Friday, March 23, 2012
சென்னை::ஐ.நா.மனிதஉரிமை கமிஷனில் அமெரிக்கா கொண்டுவந்த தீர்மானத்துக்கு ஆதரவாக, இந்தியா ஓட்டளித்ததற்கு:பிரதமருக்கும்,சோனியாவுக்கும் கருணாநிதி நன்றி தெரிவித்துள்ளார்:-

ஐ.நா., மனித உரிமை கமிஷனில் அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்துக்கு ஆதரவாக, இந்தியா ஓட்டளித்ததற்கு, பிரதமருக்கும், சோனியாவுக்கும் கருணாநிதி நன்றி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக, அவர்கள் இருவருக்கும் தி.மு.க., தலைவர் கருணாநிதி அனுப்பியுள்ள கடிதம்: (புலிகளுக்கு) தமிழர்களுக்கு எதிராக, ராஜபக்சே அரசால் நிகழ்த்தப்பட்ட மனித உரிமை மீறல்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட, ஐ.நா., தீர்மானத்துக்கு ஆதரவாக இந்தியா ஓட்டளித்ததற்கு, மிகுந்த மகிழ்ச்சியும், நன்றியும் தெரிவித்துக்கொள்கிறேன். இந்த விஷயத்தில்,(புலிகளும்) உலகத் தமிழர்களும் இந்தியாவுக்கு நன்றியுடன் இருப்பர். தீர்மானம் நிறைவேறிவிட்டதன் எதிரொலியாக, இலங்கைத் தமிழர்கள் மீது தாக்குதல் நடத்தப்படலாம் என, அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ராஜதந்திர நடவடிக்கைகள் மூலம் அத்தகைய விரும்பத்தகாத நடவடிக்கைகள் நடந்துவிடாமல், தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு கருணாநிதி தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment