Pages

Friday, March 23, 2012

இலங்கை மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டு மனிதாபிமானமற்றது:குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளமை அதிர்ச்சி தருவதாக-கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்!

Friday, March 23, 2012
இலங்கை::மனிதாபிமான நடவ டிக்கைகள் மூலம் நாட் டையும், மக்களையும் புலி பயங்கரவாதத்தின் பிடியிலிருந்து மீட்டு மக்களின் பாதுகாப்பையும், சுதந் திரத்தையும் இயல்பு வாழ்க்கையையும் ஏற்ப டுத்திக் கொடுத்த இலங்கை அரசின் மீது பல்வேறு குற் றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளமை அதிர்ச்சி தருவதாக பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

மனிதாபிமான நடவடிக்கையின் பின்னர் 2009 இல் அவசரகாலச் சட்டம் நீக்கப்பட்டது; 11900 புலிகள் புனர்வாழ் வளிக்கப்பட்டு சமூகமயப்படுத் தப்பட்டுள்ளனர்; உயர் பாதுகாப்பு வலயங்கள் அகற்றப்பட்டுள்ளன; வட க்கு - கிழக்கு பிரதேசங் களில் சோதனைச் சாவடி கள் நீக்கம்; கையேற்கப் பட்ட வீடுகள் மீள பெற் றுக்கொடுக்கப்பட்டுள்ளன; நாட்டை விட்டுச் சென்ற 20,000 பேர் மீண்டும் தாயகம் திரும்பியுள்ளனர்.

மனிதாபிமான நடவடிக்கையின் பின்னர் மேற்படி அடிப்படை நடவ டிக்கைகளின் பிரகாரம் பல்வேறு விட யங்களை மேற்கொண்ட இலங்கை அரசாங்கத்தின் மீது பல்வேறு குற்றச் சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளமை அதிர்ச்சி தருகிறது.

2009 மே மாதம் 19 ஆம் திகதி புலிகளின் பயங்கரவாத செயற்பாடுகளை வெற்றிகரமான முறையில் முறியடித்த அரசாங்கம் முன்னோக்கிச் செல்வதற்காக எதிர்பார்க்கிறது. மாறாக பின்னோக்கிச் செல்வதற்கு அல்ல. எனவும் பாதுகாப்புச் செயலாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்காலத்தில் அச்சுறுத்தல்கள் இல்லையெனக் கருதி பாதுகாப்புத் துறையினர் செயற்படாமல் இருக்க மாட்டாதெனவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

அரசு மற்றும் தனியார் ஊடகங்களின் தலைவர்களை பாதுகாப்பு செயலாளர் நேற்று முன்தினம் சந்தித்தார். இதன்போது அவர் மேற்கண்டவாறு கூறுயுள்ளார்.

பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்ற இச்சந்திப்பின் போது மனிதாபிமான நடவடிக்கையின் பின்னர் நாட்டிலே மேற்கொள்ளப்பட்ட திட்டங்கள் குறுத்து விளக்கமளித்தார்.

வெளிநாட்டிலிருந்த கே. பீ., பிரபாகரனின் நெருங்கிய நண்பன் ஒருவர் ஊடாக யுத்தத்தை வெற்றிகொள்ள முடியாதென இரு தடவைகள் கூறியிரு ந்தமை பற்றியும் இதன்போது நினைவு படுத்தினார்.

மனிதாபிமான நடவடிக்கையின் பின்னர் இலங்கை வந்த ஐக்கிய நாடுகளின் சபை மற்றும் ஐக்கிய அமெரிக்க உயர் அதிகாரிகளை வடக்கு பிரதேசத்திற்கு அனுப்பி அங்கு இடம்பெறும் அபிவிருத்தி செயற்பாடுகள் தொடர்பாக அவர்கள் நேரடியாக காணும் விதத்தில் வசதிகள் செய்து கொடுக்கப்பட்டன. அவற்றினை பார்வை யிட்ட அவர்கள் திருப்தியடைவதாகக் கூறிவிட்டு சென்றனர். பின்னர் தமது கருத்துக்களை மாற்றிக் கொண்டுள்ளனர்.

தூதுவர் ரெஜீயை சகல இடங்களுக்கும் அனுப்பினோம். தடுப்பு முகாம்களின் நிலையை கண்டறிவதற்கு பூசக்கு செல்வதற்காக ஏற்பாடுகள் செய்யப்பட்ட போதிலும் அவர் அங்கு செல்வதற்கு நேரமில்லை என்று கூறினார். அதன் பின்னர் அவருக்கு ஹெலிகொப்டர் மூலம் அவரை பூசா முகாமிற்கு செல்லவும். கட்டுநாயக்க விமான நிலையம் செல்வதற்கும் ஏற்பாடுகள் செய்து கொடுக்கப்பட்டன.

இறுதி சந்தர்ப்பத்தில் இந்தியா தமது நிலைப்பாட்டினை மாற்றுவதற்கான காரணம் 2014 ஆம் ஆண்டில் நடைபெறவுள்ள தேர்தலாகும். அதன் காரணமாகவே இலங்கைக்கு எதிராக அதன் நிலைப்பாட்டை மாற்றியுள்ளது.

இந்தியாவின் செயற்பாடுகள் தொடர்பாக இலங்கை அமைதியான முறையில் அவதானம் செலுத்தி வருகிறது. காந்தியின் பிறப்பிடமான உத்தர பிரதேசத்திலும் காங்கிரஸ் தோல்வியடைந்தது. கருணாநிதி எதிர்க்கும் பட்சத்தில் மன்மோகன் அரசு வீழ்ச்சிகாண வேண்டி ஏற்படும். அமெரிக்காவின் ஹிலாரி கிளிண்டன் இந்தியா வந்து ஜெயலலிதாவையே சந்தித்தார். இந்நிலையில் இந்தியாவின் நிலைப்பாடு மாற்றமடைந்துள்ளது.

இதன் போது மனிதாபிமான நடவடிக்கையின் முன்னரும் பின்னரும் இந்தியாவுடன் மேற்கொண்ட தொடர்புகள் குறைவடைந்துள்ளதாக ஊடகவியலாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதிலளித்த பாதுகாப்புச் செயலாளர் அதனை முற்றாக நிராகரிப்பதாகக் கூறினார்.

அந்த முன்மொழிவு தோல்வியுடைந்தாலும் எமது பயணத்தை எம்மால் தொடர்ந்தும் மேற்கொள்ள முடியுமென்பதே தமது தனிப்பட்ட கருத்தாகும் எனவும் அவர் கூறினார்.

கியூபாவுக்கு எதிராக அமெரிக்கா பல முன்மொழிவுகளை கொண்டுவந்தது எனினும் எமக்கு ஒன்றுதானே எனவும் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ கூறினார். தேசிய ஊடக மத்திய நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் லக்ஷ்மன் ஹுலுகல்லவும் இதில் கலந்து கொண்டதுடன் எல். ரீ. ரீ. ஈ. அமைப்பின் வெளிநாட்டு தொடர்புகள் மற்றும் ஊடக வலையமைப்பு தொடர்பான குறுந்திரைப்படம் ஒன்றும் இதன் போது காண்பிக்கப்பட்டது.

No comments:

Post a Comment