Friday, March 23, 2012

ஜெனீவா பிரேரணை மூலம் நாட்டுக்கு எதிராக அழுத்தங்களை பிரயோகிக்க முயற்சிக்கப்படுகின்ற போதிலும், அவ்வாறான அழுத்தங்களை முறியடிக்க எம்மால் முடியும்-பசில்!

Friday, March 23, 2012
இலங்கை::சர்வதேச அழுத்தங்கள் ஒன்றும் எமக்கு புதிதல்ல என பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.சர்வதேச அழுத்தங்களை வெற்றிகரமாக முடியடிக்கக் கூடிய இயலுமை காணப்படுகின்றது. பயங்கரவாதம் இல்லாதொழிக்கப்பட்டமையினால் நாட்டில் ஏற்பட்டுள் சமாதானம், தேசிய ஒருமைப்பாடு மற்றும் கிரமமான பொருளாதார கொள்கைகள் போன்றவற்றினால் எந்தவொரு சவாலையும் எதிர்நோக்க முடியும்.

இலங்கை காலத்திற்கு காலம் இவ்வாறான சர்வதேச அழுத்தங்களினால் பாதிக்கப்பட்டுள்ளது. ஜீ.எஸ்.பி பிளஸ் உள்ளிட்ட பல்வேறு சவால்களை இந்த அரசாங்கம் வெற்றிகரமாக எதிர்நோக்கியது.

ஜெனீவா பிரேரணை மூலம் நாட்டுக்கு எதிராக அழுத்தங்களை பிரயோகிக்க முயற்சிக்கப்படுகின்ற போதிலும், அவ்வாறான அழுத்தங்களை முறியடிக்க எம்மால் முடியும் என பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment