Monday, March 26, 2012

இந்தியாவில் இருந்து கடல் வழியாக சட்டவிரோதமான முறையில் இலங்கைக்குள் நுழைந்த ஒரு இலங்கை தமிழ் குடும்பம் பேசாளையில் கைது!

Monday, March 26, 2012
இலங்கை::இந்தியாவில் இருந்து கடல் வழியாக சட்டவிரோதமான முறையில் இலங்கைக்குள் நுழைந்த ஒரு இலங்கை தமிழ் குடும்பம் தலைமன்னாரில் கைது செய்யப்பட்டுள்ளது.

தலைமன்னார் கடற்படையினரால் நேற்று கைது செய்யப்பட்ட இந்த தமிழ் குடும்பத்தில் தாய், தந்தை மற்றும் மகன் அடங்குகின்றனர்.

மன்னார் - பேசாளை கடற்பரப்பில் வைத்து இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட மூவரும் தலைமன்னார் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் இன்று மன்னார் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

No comments:

Post a Comment