Pages

Friday, March 23, 2012

மட்டக்களப்பு காணிப் பிரச்சினைகள் தொடர்பாக ஆராயும் விஷேட கூட்டம்!

Friday, March 23, 2012
இலங்கை::மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள காணிப் பிரச்சினைகள் தொடர்பாக ஆராயும் விஷேட கூட்டமொன்று மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.கிழக்கு மாகாண கல்வி மற்றும் காணி அமைச்சர் விமலவீர திஸாநாயக்க தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில்,
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான பொன் செல்வராசா, பி.அரியநேந்திரன், சி.யோகேஸ்பரன் உட்பட மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் கே.விமலநாதன் மற்றும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள் மாகாண காணி ஆணையாளர், காணி அதிகாரிகள் பிரதேச செயலாளர்கள் உள்ளுராட்சி மன்றங்களின் தலைவர்கள் கலந்து கொண்டனர்.

கிழக்கு மாகாண சபையின் தீர்மானத்திற்கமைவாக கிழக்கிலுள்ள மாவட்டங்கள் தோறும் உள்ள காணிப் பிரச்சினைகளை ஆராயும் பொருட்டு காணிக் கூட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதற்கமையவே இக்கூட்டமும் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment