Wednesday,March,28,2012இலங்கை::புறச் சக்திகளின் ஆலோசனை அவசியமற்றது என முன்னாள் சட்ட மா அதிபர் மொஹான் பீரிஸ் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைப் பேரவையில் இலங்கை தொடர்பான தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ள போதிலும், வெளிநாட்டு சக்திகள் இலங்கை விவகாரங்களில் தலையீடு செய்ய முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் பெரும்பான்மையான பரிந்துரைகளை அரசாங்கம் ஏற்கனவே அமுல்படுத்தி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
யுத்தம் மற்றும் ஏனைய விடயங்கள் தொடர்பில் உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு கிட்டத்தட்ட 250 பரிந்துரைகளை முன்வைத்துள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கையின் நடவடிக்கைகள் தொடர்பில் வேறு எந்தவொரு நாடும் கண்காணிக்கவோ அல்லது ஆலோசனை வழங்கவோ தேவையில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தேசிய கொள்கைகளின் அடிப்படையில் அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.
ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அமுல்படுத்தும் நடவடிக்கை பல கட்டங்களாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டமைக்கு, இந்தியாவின் வாக்களிப்பு மிகவும் முக்கியமான ஏதுவாக அமைந்தது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவின் தீர்மானம் இலங்கைக்கு பாதக விளைவுகளை ஏற்படுத்தியது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
No comments:
Post a Comment