Pages

Sunday, March 25, 2012

இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பான அறிக்கையை ஸ்டீபன் ராப் அடுத்தவாரம் அமெரிக்க நாடாளுமன்றின் செனட் சபையில் சமர்ப்பிக்கவுள்ளார்!

Sunday, March 25, 2012
இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பான தமது விசாரணை அறிக்கையை அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் போர்க்குற்ற விவகாரங்களைக் கவனிக்கும் தூதுவர் ஸ்டீபன் ராப் அடுத்தவாரம் அமெரிக்க நாடாளுமன்றின் செனட் சபையில் சமர்ப்பிக்கவுள்ளார்.

இலங்கை தொடர்பாக தூதுவர் ஸ்டீபன் ராப் அமெரிக்க செனட் சபைக்கு சமர்ப்பிக்கும் மூன்றாவது அறிக்கை இதுவாகும்.

இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் குறித்து நேரில் விசாரணைகளை நடத்துவதற்காக கடந்த பெப்ரவரி மாதம் ஸ்டீபன் ராப் இலங்கைக்குப் பயணம் மேற்கொண்டிருந்தார்.

இதன்போது அவர் இலங்கை அரசதரப்பு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் சமூகப் பிரதிநிதிகளையும் சந்தித்திருந்தார்.

அத்துடன் முல்லைத்தீவுக்கு பயணம் ஒன்றை மேற்கொண்டு இறுதிப்போரில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் பற்றிய தகவல்களையும் அவர் சேகரித்திருந்தார்.

இந்தப் பயணத்தின் அடிப்படையிலேயே அவர் செனெட் சபைக்கு அறிக்கை சமர்ப்பிக்கவுள்ளார்.

No comments:

Post a Comment