Pages

Friday, March 23, 2012

இலங்கை தோல்வியடைய காரணம் பலம் வாய்ந்த நாடுகளின் அழுத்தங்களே - கருணாதிலக்க அமுனுகம

Friday, March 23, 2012
இலங்கை::ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் அமெரிக்கா கொண்டு வந்த யோசனை தொடர்பான வாக்கெடுப்பில், இலங்கை தோல்வியடைய காரணம், பலம் வாய்ந்த நாடுகளின் அழுத்தங்களும், சில நாடுகளில் உள்நாட்டு அரசியல் நிலைமைகளுமே என இலங்கை வெளிவிவகார அமைச்சின் செயலாளர் கருணாதிலக்க அமுனுகம என தெரிவித்துள்ளார்.

இலங்கை தோல்வியடைந்திருந்தாலும் தற்போது நாடு என்ற வகையில் இலங்கை செயற்படுத்தி வரும் வேலைத்திட்டங்களின் அடிப்படையில்,மனித உரிமை பேரவை, இலங்கை தொடர்பில் தனது பிரதிநிதிகள் அடங்கிய குழு ஒன்றை நியமிக்கும் நிலைமை ஏற்படாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அமெரிக்காவின் யோசனையின் அடிப்படையில், இலங்கையின் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகள் தொடர்பில் செயற்படும் விதம் தொடர்பான ஐக்கிய நாடுகள் அமைப்பிற்கு அடுத்த வருடத்தில் அறிக்கை ஒன்று வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

புலம்பெயர் தமிழர்கள், அமெரிக்கா உள்ளிடட ஐரோப்பிய நாடுகள் அரசியல் ரீதியான அழுத்தங்களை கொடுக்கும் மட்டத்திற்கு சென்றமை இந்த நிலைமை ஏற்பட மற்றுமொரு காரணமாக அமைந்துவிட்டது.

இந்தியாவின் உள்நாட்டு அரசியல் நிலைமைகள் காரணமாக இந்தியா, இலங்கை எதிராக வாக்களித்தது. எவ்வாறாயினும் யோசனை மீதான வாக்கெடுப்பின் போது, இலங்கையுடன் உறவுகளை வைத்துள்ள நாடுகள், இலங்கை மறக்காதது மகிழ்ச்சிக்குரயி விடயம் எனவும் கருணாதிலக்க அமுனுகம தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment