Tuesday, March 27, 2012

அமெரிக்காவின் ராஜாங்க செயலாளர் ஹிலரி கிளின்டனை சந்திக்க விருப்பதாக வெளியுறவுத் துறை அமைச்சர் ஜீ.எல்.பீரிஷ் தெரிவித்துள்ளார்!

Tuesday, March 27, 2012
லங்கை::விரைவில் அமெரிக்காவின் ராஜாங்க செயலாளர் ஹிலரி கிளின்டனை சந்திக்க விருப்பதாக வெளியுறவுத் துறை அமைச்சர் ஜீ.எல்.பீரிஷ் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் மே மாதத்தின் நடுப்பகுதியில் இந்த சந்திப்பு இடம்பெறும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை தொடர்ந்தும் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையுடன் தொடர்பை கொண்டிருப்பதுடன், அமெரிக்கா போன்ற நாடுகளுடனும், ராஜதந்திர செயற்பாடுகளை தொடர்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும், இலங்கைக்கு எதிராக எந்த அழுத்தங்களையும் ஏற்றுக் கொள்ள முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment