Pages

Saturday, March 24, 2012

இந்திய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல்: சீனா பிராந்தியத்தில் முன்னிலைக்கு வருவதை தடுப்பதற்கு இலங்கையுடன் இணைந்து செயற்படவேண்டும் இந்தியா-ஏ.எஸ்.கல்கட்!

Saturday, March 24, 2012
புதுடெல்லி::ஐக்கிய நாடுகள் மனிதவுரிமைகள் பேரவையில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பின் போது, இலங்கைக்கு எதிராக வாக்களித்தமை காரணமாக இந்தியாவிற்கு பாதுகாப்பு ரீதியான அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக முன்னாள் பாதுகாப்புதுறை பிரதானியொருவர் தெரிவித்துள்ளார்.

1987 ம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட இந்திய - இலங்கை ஒப்பந்ததிற்கு அமைய இலங்கை வந்த இந்தியாவின் சமாதான படையின் பிரதானி லெப்டினன் ஜெனரல் ஏ.எஸ்.கல்கட் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.

இவ்வாறான அச்சுறுத்தல்களை கட்டுப்படுத்துவதற்கு இந்தியா முயற்சி செய்ய வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போதுள்ள சூழ்நிலையில், சீனா, பிராந்தியத்தில் முன்னிலைக்கு வருவதை தடுப்பதற்கு இலங்கையுடன் இணைந்து செயற்படவேண்டும் எனவும் அவர் கோரியுள்ளார்.

இப்படியான நிலைமைகள் இந்தியாவின் பாதுகாப்பு முறைமைகளில் நெருக்கடி நிலைமையை தோற்றுவிக்கும் என லெப்டினன் ஜெனரல் கல்கட் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்தியாவின் சகலவித பாதுகாப்பு துறை சார் விடயங்களில் கடற்பிராந்திய பாதுகாப்பு தொடர்பில் இலங்கை தீர்க்கமான முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment