Sunday, March 25, 2012

பிராந்தியத்தின் தலைமைத்துவ பதவிக்கான தகுதியை இந்தியா இழந்து வருகிறது - பசில் ராஜபக்ச!

Sunday, March 25, 2012
இலங்கை::இலங்கைக்கு எதிராக ஜெனீவாவில் நிறைவேற்றப்பட்ட பிரேரணை இந்தியாவின் பிராந்தியத் தலைமைத்துவத்திற்கு விடுக்கப்பட்ட சவால் என ஜனாதிபதியின் சகோதரரும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சருமான பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார். தெற்காசிய பிராந்திய வலய நாடுகளில் பல என இந்தியாவிற்கு முரனான நிலைப்பாட்டைக் கொண்டிருந்தன.

அமெரிக்காவிற்கு ஆதரவாக இந்தியா வாக்களித்தது. எனினும், மாலைதீவு மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகள் இலங்கைக்கு ஆதரவாக வாக்களித்தன.

மனித உரிமை பேரவையில் அங்கம் வகிக்காத நிலையில் பாகிஸ்தானும் இலங்கைக்கு ஆதரவை தெரிவித்திருந்தது.

இத்தகைய சூழலில் பிராந்தியத்தின் தலைமைத்துவத்திற்கான தகுதியை இந்தியா இழந்து வருவதாகவும் இலங்கைக்கு எதிரான ஜெனீவா பிரேரணை, இந்தியாவிற்கு பாதக விளைவுகளை ஏற்படுத்தும் எனவும் அமைச்சர் பசில் ராஜபக்ச எச்சரித்துள்ளார்.

No comments:

Post a Comment