Pages

Thursday, March 22, 2012

முன்னாள் அமெரிக்கத் தூதுவர் ரொபர்ட் ஓ பிளேக், சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்திற்கு எஸ்.எம்.எஸ் அனுப்பி பிரபாகரனை மீட்க முயற்சி செய்தார் - விமல் வீரவன்ச!

Thursday, March 22, 2012
இலங்கை::அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் நோர்வே போன்ற நாடுகள் போரைத் தடுப்பதற்கு பல்வேறு வழிகளில் முயற்சி செய்தன. இந்தநிலையில், முன்னாள் அமெரிக்கத் தூதுவர் ரொபர்ட் ஓ பிளேக், சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்திற்கு எஸ்.எம்.எஸ் அனுப்பி பிரபாகரனை மீட்க முயற்சி செய்தார் என அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.பிரிட்டன், பிரான்ஸ் போன்ற நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்கள் இலங்கைக்கு விஜயம் செய்து, ஜனாதிபதிக்கு அழுத்தங்களை பிரயோகித்தனர். எனினும், இந்த எந்தவொரு அழுத்தத்திற்கும் ஜனாதிபதி அடிபணியவில்லை.

நந்திக்கடல் போர் பற்றி மக்கள் அறிந்திருந்த போதும், சமகாலத்தில் கொழும்பில் இடம்பெற்ற சர்வதேச இராஜதந்திர போர் பற்றி பலருக்குத் தெரியாது. சரியான தீர்மானங்களை எடுக்காத காரணத்தினால் இதற்கு முன்னர் ஆட்சி செய்த தலைவர்களினால் போரை வெற்றிகொள்ள முடியவில்லை என அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment