Monday, March 26, 2012இலங்கை::புனர்வாழ்வளிக்கப்பட்ட புலிகள் அமைப்பின், 384 முன்னாள் உறுப்பினர்களை சமூகமயப்படுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இம்மாதம் 29 ஆம் திகதி கொழும்பில் நடைபெறவுள்ள நிகழ்வொன்றில் இவர்கள் சமூகமயப்படுத்தப்படவுள்ளதாக புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் பிரிகேடியர் தர்ஷன ஹெட்டியாராச்சி குறிப்பிட்டார்.
விடுதலை செய்யப்படவுள்ளவர்களில் 67 பேர் முன்னாள் புலி போராளிகள் எனத் தெரிவிக்கப்படுகின்றது. இதற்கான வைபவம் கொழும்பு இராமகிருஷ்ண மிஷன் மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
பெற்றோர்களிடம் கையளிக்கப்படவுள்ள இந்தக் குழுவினரில் மாணவ, மாணவியரும் அடங்குவதாக புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் குறிப்பிட்டார்.
சமூகமயப்படுத்தப்படவுள்ளவர்களுக்கு ஏற்கனவே தொழிற்கல்விகள் பயிற்றுவிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறினார்.
No comments:
Post a Comment