Pages

Wednesday, February 8, 2012

வாகரைப்பிரதேச செயலக அதிகாரிகள் ஹம்பாந்தோட்டைக்கு கற்கைக் கள விஜயம்!

Wednesday,February,08,2012
இலங்கை::மட்டக்களப்பு மாவட்டத்தில் சிறந்த பிரதேச செயலக நிர்வாகப்பிரிவுகளில் ஒன்றாகத் தெரிவு செய்யப்பட்ட வாகரை பிரதேச செயலக அதிகாரிகள் அனைவரும் பிரதேச செயலாளர் செல்வி ஆர். ராகுலநாயகி தலைமையில்
அகில இலங்கை ரீதியில் சிறந்த பிரதேச செயலக நிர்வாகப் பிரிவாகத் தெரிவு செய்யப்பட்ட ஹம்பாந்தோட்டை வலஸ்முல்ல பிரதேச செயலகத்திற்கு கள விஜயமொன்றை மேற்கொண்டிருந்தனர்.
இந்தக் கற்கைக் கள விஜயத்தின்போது வலஸ்முல்லப் பிரதேச செயலாளர் தீபிகா கே.குணவர்தன மற்றும் அந்தப் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் பரஸ்பரம் சிறந்த நிர்வாகத்திற்கான செயற்திறன் மிக்க கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர்.
கடந்த முப்பது வருட காலத்தில் வாகரைப் பிரதேசத்திலிருந்து அரச உத்தியோகத்தர்கள் நாட்டின் இதர பகுதிகளுக்கு கள விஜயம் மேற் கொண்டது இதுவே முதற்தடவையாகும்.

No comments:

Post a Comment