Pages

Saturday, February 4, 2012

இலங்கைக்கு சேறு பூசும் முயற்சியில் பிரிட்டன் புலி ஆதரவு அமைப்பான பிரிட்டன் தமிழர் பேரவை ஈடுபட்டுள்ளது-திவயின!

Saturday, February 04, 2012
இலங்கை::இலங்கைக்கு சேறு பூசும் முயற்சியில் பிரிட்டன் புலி ஆதரவு அமைப்பான பிரிட்டன் தமிழர் பேரவை ஈடுபட்டுள்ளது-திவயின:-

இலங்கைக்கு சேறு பூசும் முயற்சியில் பிரிட்டன் புலி ஆதரவு அமைப்பான பிரிட்டன் தமிழர் பேரவை ஈடுபட்டுள்ளது என திவயின பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.இலங்கை அரசாங்கம் போர்க் குற்றச் செயல்களில் ஈடுபட்டதாகத் தெரிவித்து கண்காட்சியொன்று நடத்தப்பட்டுள்ளது.

இந்தக் கண்காட்சியில் வன்னி இறுதிப் போரை நேரில் கண்ட சாட்சியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர். பிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஊடகவியலாளருக்கு இந்த சாட்சியாளர்கள் தகவல்களை வழங்கியுள்ளனர்.

இறுதிக் கட்ட போரின்போது படையினர் தமிழ் மக்களை கொலை செய்ததாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். எனினும், இந்த சாட்சியாளர்கள் முல்லைத்தீவு எந்த பிரதேசத்தில் அமைந்துள்ளது என்பதனைக் கூட அறியாதவர்கள் என திவயின பத்திரிகை சுட்டிக்காட்டியுள்ளது.

No comments:

Post a Comment