Pages

Thursday, February 9, 2012

இந்து ஆபீசில் போலீஸ் திடீர் சோதனை!

Thursday, February 09, 2012
சென்னை::இந்து ஆங்கில நாளிதழ் அலுவலகத்தில் இன்று போலீசார் திடீர் சோதனை நடத்தினர். கோவையை சேர்ந்த அதிமுக முன்னாள் எம்பி கே.சி.பழனிச்சாமி, சில நாட்களுக்கு முன்பு சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு கொடுத்தார். அதில், ரூ.400 கோடி மதிப்புள்ள 300 ஏக்கர் நிலத்தை இந்து ராம், ரமேஷ் ரங்கராஜன் ஆகியோர் எனக்கு விற்றனர். நாளடைவில் அந்த நிலத்தின் மதிப்பு உயர்ந்ததால் என்னை மிரட்டி மீண்டும் பறித்து கொண்டனர். தங்கள் செல்வாக்கை பயன்படுத்தி என் மீது பொய் புகார் கொடுத்து கைது செய்ய வைத்தனர். இதனால் 2 பேர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.

இந்த புகார் குறித்து மத்திய குற்றப் பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்து ராம் கொடுத்த புகாரின் அடிப்படையில், கே.சி.பழனிச்சாமி ஏற்கனவே கைது செய்யப்பட்டிருந்தார். அதுதொடர்பான வழக்கு விசாரணையும் நடந்து வருகிறது. இந்த வழக்கு விசாரணைக்காக இன்று காலை மத்திய குற்றப் பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் மோகன் தலைமையிலான போலீசார் இந்து அலுவலகத்துக்கு சென்றனர். அங்கு சோதனை நடத்திய பிறகு நிர்வாகிகளிடம் வழக்கு தொடர்பான ஆவணங்கள் குறித்து விசாரணை நடத்தி உள்ளனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

No comments:

Post a Comment