Friday, February 10, 2012

மாலைதீவு முன்னாள் ஜனாதிபதியின் குடும்பத்திற்கு பாதுகாப்பு வழங்க: ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உத்தரவிட்டுள்ளார்!

Friday, February 10, 2012
இலங்கை::மாலைதீவு முன்னாள் ஜனாதிபதியின் குடும்பத்திற்கு பாதுகாப்பு வழங்க: ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உத்தரவிட்டுள்ளார்:-

மாலைத்தீவு முன்னாள் ஜனாதிபதி மொஹமட் நஷீட்டின் மனைவி அவரது மகளுடன் இலங்கை சென்றுள்ளதுடன் அவர்களுக்கு பாதுகாப்பு வழங்குமாறு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ நேற்று (09) காவற்துறை மா அதிபருக்கு உத்தரவிட்டுள்ளார். மாலைத்தீவு முன்னாள் ஜனாதிபதியின் பாரியார் நேற்று முன்தினம் தனது மகளுடன் இலங்கை சென்றார்.

அதேவேளை முன்னாள் ஜனாதிபதி நஷீட்டுக்கு பாதுகாப்பு வழங்குமாறும், ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, புதிய ஜனாதிபதி மொஹமட் வாஹிட் ஹசனிடம் கேட்டுக்கொண்டுள்ளார். இலங்கையில் தஞ்சமடைந்துள்ள மலைத்தீவின் முன்னாள் ஜனாதிபதியின் பாரியார் , ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவை தொலைபேசியில் தொடர்புக்கொண்டு, தனது கணவருக்கு பாதுகாப்பு வழங்க தலையீடுகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டதாக ஜனாதிபதியின் ஊடகப் பணிப்பாளர் பந்துல ஜயசேகர தெரிவித்துள்ளார்.

இது குறித்து ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ, மலைத்தீவின் புதிய ஜனாதிபதியுடன் தொலைபேசியில் தொடர்புக்கொண்டு கலந்துரையாடியதாகவும் ஜயசேகர கூறியுள்ளார்.

No comments:

Post a Comment