Pages

Friday, February 10, 2012

மாலத்தீவு நெருக்கடி நிலை: தயார் நிலையில் இந்திய கடற்படை!

Friday, February 10, 2012
புதுடெல்லி::மாலத்தீவு அதிபராக இருந்த முகமது நஷீது பதவி விலகிய பிறகு ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையை இந்தியா உன்னிப்பாக கவனித்து வருகிறது.

அரசியல் பதற்றம் தொடர்வதால், இந்தியா தனது பாதுகாப்பு நெருக்கடி மேலாண்மை குழுவுடன் ஆலோசித்து வருகிறது.

மாலத்தீவு நிலைமை பற்றி நேற்று தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனனுடன் பிரதமர் மன்மோகன் சிங் ஆலோசனை நடத்தினார்.

மீட்பு நடவடிக்கை தேவைப்பட்டால், அதை சமாளிப்பதற்கு போர்க்கப்பல்களும், போர்விமானங்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

No comments:

Post a Comment