Saturday, February 4, 2012

சென்னை மதுரை விமானத்தை ஓட்ட வந்த விமானி சஸ்பெண்ட்!

Saturday, February 04, 2012
சென்னை::சென்னையில் இருந்து மதுரைக்கு செல்ல இருந்த ஏர் இந்தியா விமானத்தை ஓட்ட வந்த ஏர் இந்தியா விமானி கேப்டன் செபாஸ்டியனிடம் இந்த சோதனை நடத்தப்பட்டது. அப்போது அவர் மது அருந்தி இருப்பது சோதனையில் தெரிய வந்தது.

இதையடுத்து, அவர் 3 மாத காலத்துக்கு சஸ்பெண்டு செய்யப்பட்டு உள்ளார். விமான போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் அமைப்பான சிவில் விமான போக்குவரத்து இயக்குனரகம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. செபாஸ்டியன், இந்த அமைப்பின் விமான பணிகள் இன்ஸ்பெக்டராகவும் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

இதுபோல், குடித்து விட்டு வந்ததால், கடந்த 10 நாட்களில் 4 விமானிகள் சஸ்பெண்டு செய்யப்பட்டு இருப்பதாக சிவில் விமான போக்குவரத்து இயக்குனரக தலைவர் பாரத் பூஷண் தெரிவித்தார். குடித்து விட்டு வரும் விமானிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறு நான் உத்தரவிட்டுள்ளேன். நாங்கள் வழக்கமான சோதனை நடத்துவதுடன் திடீர் சோதனையிலும் ஈடுபடுவோம் என்று அவர் கூறினார்.

இதற்கிடையே, பல்வேறு விமான நிலையங்களில் நடத்தப்பட்ட சோதனைகளில், மது அருந்தியதை கண்டுபிடிக்கும் கருவி திருப்திகரமாக செயல்படவில்லை என்று தெரிய வந்துள்ளது.

எனவே, அல்கோ சென்சார் 4 என்ற அதிநவீன கருவியை வாங்கி விமான நிலையங்களில் பயன்படுத்தும்படி, விமான நிறுவனங்களுக்கு சிவில் விமான போக்குவரத்து இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.

No comments:

Post a Comment