Sunday, February 12, 2012இலங்கை::வெள்ளவத்தை, கெனல் வீதி பகுதியில் வைத்து ராமசாமி பிரபாகரன் என்ற வர்த்தகர் கடத்திச் செல்லப்பட்டுள்ளார்.
வேனொன்றில் வந்த இனந்தெரியாதோரினால் இவர் நேற்று மாலை அவரது வீட்டு முற்றத்தில் வைத்து கடத்திச் செல்லப்பட்டுள்ளதாக கொழும்பு பிராந்தியத்திற்கு பொறுப்பான உயர் பொலிஸ் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
குறித்த வர்த்தகரை கடத்திய நபர்கள் நேற்றிரவு தொலைபேசி ஊடாக அவரது மனைவியை தொடர்புக்கொண்டு 10 கோடி ரூபாவை கப்பமாக கோரியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் கொழும்பு குற்றப்புலனாய்வு பிரிவினர் வௌ்ளவத்தை பொலிஸாருடன் இணைந்து மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
No comments:
Post a Comment