Friday, February 03, 2012இலங்கை::ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, அமெரிக்காவிற்கு பிரதிதிகள்குழுவொன்றை அனுப்பி இலங்கை மனித உரிமை நிலைமைகள் குறித்து விளக்கமளிக்கத ;தீர்மானித்துள்ளார்.
எதிர்வரும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளுக்கு முன்னதாகஇந்தக் குழு அமெரிக்கா விஜயம் செய்ய உள்ளது.
மனித உரிமை நிலைமைகளை மேம்படுத்துவதற்காக அரசாங்கம் எடுத்து வரும்முனைப்புக்கள் குறித்து, அமெரிக்கத் தலைவர்களுக்கு விளக்கமளிக்கப்பட உள்ளதாகத்தெரிவிக்கப்படுகிறது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் இலங்கைக்கு எதிராகதீர்மானம் நிறைவேற்றப்பட்டால் அதற்கு ஆதரவளிக்கப்படும் என அமெரிக்கா அறிவித்துள்ளது.
எனினும், மனித உரிமை நிலைமையை மேம்படுத்த பூரண ஒத்துழைப்புவழங்கப்படும் என அமெரிக்கா அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பில் அண்மையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்திலும்கலந்துரையாடப்பட்டுள்ளது.
மனித உரிமை பேரவை அமர்வுகளுக்கு முன்னதாக அமெரிக்காவுடன் தொடர்புகளைப்பேண வேண்டியது அவசியம் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
எதிர்காலத் திட்டங்கள் மற்றும் மனித உரிமையை மேம்படுத்தஎடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து அமெரிக்காவிற்கு தெளிவுபடுத்த வேண்டுமென ஜனாதிபதிகுறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, பிரதிநிதிகள் குழுவினை அனுப்பி வைப்பதன் மூலம் அமெரிக்காவின்நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்படாது என வீடமைப்பு அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
தற்போதைய சூழ்நிலையில் கடும்போக்குடைய சிந்தனைகளை பின்பற்றுவதுபொருத்தமகாது என அமைச்சர் அனுர பிரியதர்சன யாபா தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இந்தியாவி;ன் ஒத்துழைப்பு இருந்தால் சர்வதேசஅழுத்தங்களை முறியடிக்க முடியும் என அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment