Tuesday, February 7, 2012

கபாலீஸ்வரர் கோயில் தைப்பூச விழா : இன்று முதல் போக்குவரத்து மாற்றம்!

Tuesday, February 07, 2012
சென்னை::மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் தை பூச தெப்ப திருவிழா இன்று (7ம் தேதி) முதல் 9ம் தேதி வரை நடக்கிறது. இதனால் மயிலாப்பூர் பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட உள்ளது. இன்று முதல் 9ம் தேதி வரை மாலை 6 மணி முதல் இரவு 11 மணி வரை கபாலீஸ்வரர் கோயிலை சுற்றியுள்ள பகுதிகளான லஸ் ரவுண்டானாவிலிருந்து ஆர்.கே. மடம் சாலை நோக்கியும், கச்சேரி சாலையிலிருந்து மத்தள நாராயணன் தெரு நோக்கியும், டாக்டர் ரங்கா சாலையிலிருந்து வெங்கடேச அக்ரஹாரம் சாலை நோக்கியும், புனிதமேரி சாலையிலிருந்து ஆர்.கே. மடம் சாலை நோக்கியும், சித்ரகுளம் கிழக்கிலிருந்து சித்ரகுளம் வடக்கு தெரு நோக்கியும், மந்தைவெளி சாலையிலிருந்து ஆதம் தெரு நோக்கியும், தென்கூர் செல்வ விநாயகர் கோயில் தெரு நோக்கியும், மேற்கு சித்ரகுளம் தெரு நோக்கியும் வாகனங்கள் செல்ல அனுமதி கிடையாது.

ரோயப்பேட்டை நெடுஞ்சாலை வழியாக அடையாறு செல்லும் வாகனங்கள் லஸ் சர்ச் ரோடு, டிசில்வா ரோடு, டாக்டர் ரங்கா ரோடு, சிபி ராமசாமி ரோடு, வி.கே. ஜயர் சாலை வழியாக மந்தைவெளி செல்லலாம்.

அடையாறிலிருந்து ராயப்பேட்டை செல்லும் வாகனங்கள் ஆர்.கே.மடம் ரோடு, மந்தைவெளி, வி.கே.அய்யர் ரோடு, சிருங்கேரி மடம் சாலை, வாரன்ரோடு, டாக்டர் ரங்கா ரோடு, கிழக்கு அபிராமபுரம் முதல் தெரு, லஸ் அவென்யூ, கற்பகம்மாள் நகர், பி.எஸ். சிவசாமி சாலை வழியாக லஸ் அல்லது ராயப்பேட்டை செல்லலாம்.

மேயிலாப்பூர் கோயில் குளம் அருகில் உள்¢ள மாநகர பஸ் நிறுத்தம் லஸ் சர்ச் சாலையில் அமிர்தாஞ்சன் கம்பெனி அருகில் மாற்றப்பட்டுள்ளது.
ஆர்.கே.மடம் சாலையிலிருந்து வரும் பக்தர்களின் வாகனங்கள் பி.எஸ். மேல்நிலைப்பள்ளியின் உட்புறம் விளை யாட்டு மைதானத்தில் நிறுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

கிழக்குபுறம் இருந்து மயிலாப்பூர்¢ குளம் நோக்கி வரும் பக்தர்களின் வாகனங்கள் லஸ் சர்ச் ரோடு, காமதேனு திருமண மண்டபம் (தியேட்டர்) எதிரில் நிறுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

மேற்கிலிருந்து வரும் பக்தர்களின் வாகனங்கள் சாய்பாபா கோயில் அருகில், வெங்கடேச அக்ரஹாரம் திருமயிலை ரயில்வே நிலைய பாலத்தின் கீழ் நிறுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment