Saturday, February 11, 2012

சர்வதேச அழுத்தங்களிலிருந்து மீள இலங்கைக்கு தொடர்ச்சியாக ஆதரவு வழங்கப்படும் என சீனா அறிவித்துள்ளது!

Saturday, February 11, 2012
சர்வதேச அழுத்தங்களிலிருந்து மீள இலங்கைக்கு தொடர்ச்சியாக ஆதரவு வழங்கப்படும் என சீனா அறிவித்துள்ளது.
எதிர்காலத்தில் சர்வதேச சமூகத்தினால் பிரயோகிக்கப்படும் எந்தவொரு அழுத்தத்தையும் வெற்றிகரமாக முறியடிப்பதற்கு சீனா முழுமையான ஆதரவளிக்கும் என ஷென்சீ மாநில கொம்யூனிஸ்ட் கட்சி மத்திய செயற்குழு செயலாளர் யூவான் சுன்கீன் தெரிவித்துள்ளார்.

இலங்கைப் பிரதமர் டி.எம். ஜயரட்னவை சந்தித்த போது சுன்கீன் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை தொடர்பில் சர்வதேச ரீதியில் எழும் பிரச்சினைகளின் போது சீனா இலங்கையுடன் கைகோர்த்து செயற்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

அபிவிருத்திப் பணிகளுக்கு சீனா தொடர்ந்தும் ஒத்துழைப்பு வழங்கும் எனTk; சுன்கீன் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment