Sunday, February 12, 2012

ரொபட் பிளேக் இலங்கை வருகை!

Sunday, February 12, 2012
இலங்கை::தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கு பொறுப்பான அமெரிக்க உதவி இராஜாங்க செயலாளர் ரொபர்ட் பிளேக் நேற்றிரவு இலங்கைக்கு விஜயம் செய்துள்ளார்.

மாலைத்தீவிலிருந்து யு.எல்.104 விமானத்தின் மூலம் ரொபர்ட் பிளேக் உள்ளிட்ட குழுவினர் நாட்டிற்கு வருகைத் தந்ததாக கட்டுநாயக்க விமான நிலையத்தின் கடமைநேர முகாமையாளர் தெரிவித்தார்.

இவரின் இந்த விஜயத்தின் போது வெளிவிவகார அமைச்சர் உள்ளிட்ட முக்கிய அரச பிரதிநிதிகளை சந்தித்து கலந்துரையாடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவர் கடந்த செப்டெம்பர் மாதம் நாட்டிற்கு இறுதியாக வந்திருந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கைக்கான இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள இவர்கள் உயர் அதிகாரிகள் பலரைச் சந்திக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கூட்டத்தொடர் விரைவில் ஆரம்பமாகவுள்ள நிலையில் அமெரிக்க உயர் அதிகாரிகளின் இலங்கை விஜயமானது குறிப்பிடத்தக்கதாக அமைகிறது.

No comments:

Post a Comment