Thursday, February 09, 2012இலங்கை::இந்திய கடல் எல்லைக்குள் சட்டவிரோதமாக நுழையும் இலங்கை மீனவர்களை வழக்கு விசாரணையின்றி ஒரு மாத காலத்தினுள் துரிதமாக விடுவிக்க இந்திய மத்திய அரசாங்கமும் மாநில அரசுகளும் இணக்கம் தெரிவித்துள்ளதாக கடற்றொழில் நீரியல் வள அமைச்சர் டாக்டர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.
இதற்கு முன்னோடி நடவடிக்கையாக மாநில அரசுகள் இலங்கை மீனவர்கள் மீதான வழக்குகளை வாபஸ்பெற்று வருவதோடு 6 இலங்கை மீனவர்கள் மட்டுமே இந்திய சிறையில் உள்ளதாகவும் அமைச்சர் கூறினார். ஜனநாயக தேசிய முன்னணி எம்.பி. அநுர குமார திசாநாயக்க முன் வைத்த கவனயீர்ப்புப் பிரேரணைக்கு பதிலளித்து உரையாற்றிய அமைச்சர் மேலும் கூறியதா வது :- இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரப்பில் மீன்பிடிப்பதை தடுப்பது தொடர்பாகவும் இலங்கை மீனவர்கள் இந்திய கரையோரப் பாதுகாப்பு பிரிவினால் கைதாவது குறித்தும் இலங்கை - இந்திய கூட்டு செயற்பாட்டுக் குழு கூடி ஆராய்ந்து வருகிறது.
இந்திய மத்திய அரசும் மாநில அரசுகளும் எல்லை தாண்டும் மீனவர்கள் தொடர்பில் வேறுபட்ட முறைகளையே கடைப்பிடிக்கின்றன. மத்திய அரசினால் கைதுசெய்யப் படும் இலங்கை மீனவர்கள் ஒரு வருடம் வரை தடுத்து வைக்கப்படுகின்றனர். தமிழ் நாட்டில் கைதானால் வழக்கு விசாரணை யின்றி ஒரு மாதம் வரை தடுத்து வைக்கப்பட்டு பின்னர் விடுவிக்கப் படுவர். இறுதியாக நடந்த கூட்டு செயற்பாட்டுக் குழு கூட்டத் தில் சகல மாநில அரசு பிரதி நிதிகளும் கலந்து கொண் டனர். இதன்போது தமிழ் நாட்டு முறை போன்றே மத்திய அராசங்கமும் ஏனைய மாநில அரசுகளும் இலங்கை மீனவர்களை ஒரு மாத காலத்தினுள் விடுவிக்க அனுமதித்தன.
இறத்கு முன்னோடியாக ஆந்திரா அரசு தனது பிடியிலுள்ள இலங்கை மீனவர்களுக்கு எதிரான வழக்குகளை வாபஸ் பெற்றுள்ளது.
இதன்படி சர்வதேச கடல் எல்லை சட்டத்தின் படி வழக்கு இன்றி இலங்கை மீனவர்கள் விடுவிக்கப்படுவர். நான் கடற்றொழில் மீன்பிடித் துறை அமைச்சு பதவியை ஏற்றது முதல் 777 மீனவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இறுதியாக சுமார் 20 பேர் தடுத்து வைக்கப் பட்டிருந்ததோடு தற்பொழுது 6 பேரே சிறையில் உள்ளனர். ஏனையோர்
No comments:
Post a Comment