Pages

Saturday, February 11, 2012

அவதூறு பேச்சு: விஜயகாந்த் மீது உயர்நீதிமன்றத்தில் வழக்கு!

Saturday, February 11, 2012
சென்னை::முதல்வர் ஜெயலலிதா குறித்து அவதூறாக பேசியதாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் மீது சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

தமிழக சட்டப்பேரவையில் அதிமுகவுக்கும், தேமுதிகவுக்கு நடந்த காரசார விவாதத்தால் பெரும் சர்ச்சை எழுந்தது. எனவே சட்டசபையிலிருந்து தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

இதையடுத்து அவர் தேமுதிக அலுவலகத்தில் பத்திரிக்கையாளர்களை சந்தித்து பேசினார். அப்போது முதல்வர் ஜெயலலிதா குறித்து அவதூறு கருத்துக்களை தெரிவித்ததாகவும், பேட்டி மூலம் மோதலை உருவாக்கியுள்ளார் என்றும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இது தொடர்பாக கோயம்பேடு போலீஸ் ஸ்டேசனில் தொடரப்பட்ட புகார் மீதும் நடவடிக்கை எடுக்க உத்தரவிடவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த மனு மீதான விசாரணை திங்கட்கிழமையன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கெனவே விஜயகாந்த் மீது அதிமுகவினர் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளனர்.

No comments:

Post a Comment