Saturday, February 11, 2012இலங்கை::மாலைதீவுடன் நெருக்கமான நாடென்ற ரீதியில் எந்தவிதமான உதவிகளையும் வழங்குவதற்கு இலங்கை தயாராகவுள்ளது. எனினும், மாலைதீவின் உள்நாட்டு விவகாரத்தில் எந்தவொரு வெளிநாடும் தலையிடக்கூடாதென்பதே இலங்கையின் நிலைப்பாடு என இலங்கையின் பிரதிவெளிவிவகார அமைச்சர் நியோமல் பெரேரா தினகரனுக்குத் தெரிவித்தார்.
இது குறித்து மேலும் அவர் தெரி விக்கையில், மாலைதீவில் ஜனநாயக ரீதியில் தெரிவு செய்யப்பட்டதொரு அரசாங்கம் செயற்படுகிறது. பதவி விலகியிருக்கும் மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதி நiட் ஜனநாயக ரீதியில் தேர்வுசெய்யப்பட்டவர். புதிய ஜனாதி பதியாகப் பதவியேற்றிருப்பவரும் ஜனநாயக ரீதியிலேயே தெரிவு செய்யப்பட்டவர்.
எனவே, மாலைதீவில் தற்பொழுது தோன்றியிருக்கும் பிரச்சினைகள் அரசியல் ரீதியாக, அமைதியான முறையில் தீர்க்கப்பட வேண்டும் என்பதே இலங்கையின் நிலைப்பாடு.
மாலைதீவில் தோன்றியிருக்கும் குழப்பநிலையானது அந்நாட்டின் உள்விவகாரமாகும். இதில் எந்தவொரு வெளிநாடுகளும் தலையிடக் கூடாது. ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாலைதீவு அரசாங்கம் தனக்குள்ளேயே இப்பிரச்சினைகளைத் தீர்க்க வேண்டும். இதுவே இலங்கையின் நிலைப்பாடாகும்.
தமது நாட்டில் தோன்றியிருக்கும் பிரச்சினைகளைத் தீர்க்கும் சக்தி அந்நாட்டு அரசாங்கத்திடம் இருக்கும் என்பதால், வெளிநாடுகளின் தலையீடுகள் தலையிடுவதை நாம் விரும்பவில்லை.
மாலைதீவு இலங்கையுடன் மிகவும் நட்புக்கொண்ட நாடு என்ற ரீதியில் எந்த உதவிகளையும் மாலைதீவு அரசாங்கத்துக்கு வழங்க இலங்கை தயாராகவுள்ளது என்றும் பிரதி வெளிவிவகார அமைச்சர் நியோமல் பெரேரா மேலும் தெரிவித்தார்.
இதேவேளை அமைச்சரவை முடிவுகளை வெளியிடும் செய்தியாளர் மாநாட்டில் கருத்துத் தெரிவித்த அமைச்சரவை பதில் பேச்சாளர் அமைச்சர் அநுர பிரியதர்சன யாப்பா கூறியதாவது,
மாலைதீவு நாட்டின் உள்விவகாரங்களில் இலங்கை அரசாங்கம் தலையிட முடியாது.
மாலைதீவு புதிய அரசாங்கத்துடனான உறவு தொடர்பில் ராஜதந்திர ரீதியில் தீர்மானிக்கப்படும்.
மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதியின் குடும்பத்தினருக்கு இலங்கை ஒன்றும் அன்னியமானதல்ல. இந்த வகையில் அக்குடும்பத்தினருக்கு அரசாங்கம் தஞ்சமளித்துள்ளது எனக் கூறினார்.
மாலைதீவு புதிய அரசாங்கத்துடன் இலங்கை தொடர்புகளை வைத்துக்கொள்ளுமா என ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கப் பதிலளித்த அமைச்சர், நான் அறிந்தவரை இந்தியா புதிய அரசாங்கத்தை ஏற்றுக்கொண்டுள்ளது. எமது உறவுகள் குறித்து ராஜதந்திர மட்டத்தில் முடிவுகள் எட்டப்படும் எனவும் தெரிவித்தார்.
மாலைதீவின் உள்கை விவகாரங்களில் இலங்கை அரசாங்கம்தலையிட முடியாது. எனினும் இலங்கையிலுள்ள அவரது மனைவி பிள்ளைகளுக்கு நாம் தஞ்சமளிப்போம் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
அமெரிக்க நிலைப்பாடு: நiட் அதிருப்தி
மாலைதீவின் புதிய ஜனாதிபதியையும், புதிய அரசாங்கத்தையும் ஏற்றுக்கொள்வதாக அமெரிக்கா தெரிவித்திருக்கும் கருத்துத் தொடர்பில் ஜனாதிபதி பதவியிலிருந்து விலகியிருக்கும் மொஹமட் நiட் அதிருப்தி வெளியிட்டுள்ளார்.
மாலைதீவின் புதிய ஜனாதிபதியாகப் பதவியேற்றிருக்கும் வாஹீட் மற்றும் அவர் தலைமையிலான அரசாங்கத்தை ஏற்றுக்கொண்டிருப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் இந்த நிலைப்பாடு தொடர்பில் தாம் அதிருப்தியடைவதாக நiட் நேற்றையதினம் ஊடகவியலாளர்கள் மத்தியில் கருத்துத் தெரிவிக்கும்போது கூறினார்.
மாலைதீவில் பதவியேற்றிருக்கும் புதிய ஜனாதிபதியையும், அவர் தலைமையிலான அரசாங்கத்தையும் ஏற்றுக்கொள்கிaர்களா என அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் பேச்சாளரிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு ‘ஆம்’ என அவர் பதிலளித்துள்ளார்.
அமெரிக்காவின் இந்த நிலைப்பாடு உதவியளிக்காது. இங்கு உண்மையில் என்ன நடைபெறுகிறது என்பதை அவதானிக்க வேண்டும் எனத் தெரிவித்திருக்கும் நiட், இந்த நிலைப்பாடு மாலைதீவில் காணப்படும் நிலைமையை மேலும் மோசமாக்குவதற்கு வழிவகுக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, மாலைதீவில் ஏற்பட்டிருக்கும் குழப்பநிலை பற்றி ஆராய்வதற்கும், முன்னாள் நiட்டின் பாதுகாப்புத் தொடர்பில் ஆராய்வதற்கு ஐக்கிய நாடுகள் சபையின் விசேட பிரதிநிதியொருவரும் மாலைதீவு அனுப்பிவைக்கப்பட்டுள்ளார்.
இந்த அதிகாரி இருதரப்பினரையும் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்துவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment