Saturday, February 11, 2012

விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ள புலிச் சந்தேக நபர் ஒருவரை பயங்கரவாதத் தடைப் பிரிவிற்கு மாற்றுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது!

Saturday, February 11, 2012
இலங்கை::விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ள புலிச் சந்தேக நபர் ஒருவரை பயங்கரவாதத் தடைப் பிரிவிற்கு மாற்றுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.விளக்க மறியல் உத்தரவின் பேரில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தங்கவேல் நிமலன் என்ற புலி சந்தேக நபரையே இவ்வாறு பயங்கரவாதத் தடைப் பிரவிடம் ஒப்படைக்குமாறு நீதவான் அறிவித்துள்ளார்.

பொதுமக்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படக் கூடுமென்ற காரணத்தினால் இவ்வாறு பயங்கரவாதத் தடைப் பிரிவிற்கு மாற்றுமாறு கொழும்பு உயர் நீதிமன்ற நீதவான் சுனில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

சட்ட மா அதிபர் திணைக்களத்தினால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக நீதவான் இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளார். பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சந்தேகநபரை எதிர்வரும் மே மாதம் 2ம் திகதி வரையில் விளக்க மறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

No comments:

Post a Comment