Monday, February 6, 2012

தென்மாநிலங்களில் வலுவாகா காலூன்றுகிறார்கள் மாவோயிஸ்டுகள்-ஐபி எச்சரிக்கை!

Monday, February 06, 2012
டெல்லி::தமிழ்நாடு, கேரளா. கர்நாடக மாநிலங்களில் மாவோயிஸ்டுகள் முகாம்கள் அமைத்து வருவது அதிகரித்து வருவதாக மத்திய உளவு அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

மூன்று மாநிலங்களும் சந்திக்கும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் அண்மைக்காலமாக மாவோயிஸ்டுகளின் முகாம்கள் அதிகரித்திருக்கிறது என்பது உளவு அமைப்பின் தகவல்.

மாவோயிஸ்டுகளை வேட்டையாடுவதற்காக அமைக்கப்பட்டுள்ள சிறப்புப் படைகளை இலக்கு வைத்து தாக்குவது என்பதுதான் மாவோயிஸ்டுகளின் இலக்கு என்றும் அந்த எச்சரிக்கை தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெல்லி, பஞ்சாப், ஹரியானா மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் மாவோயிஸ்டுகளின் முன்னணி அமைப்புகள் இயங்கி வருவதாகவும் உளவு அமைப்பு கூறியுள்ளது.

ஏற்கெனவே வடகிழக்கு மாநிலங்களில் பிரிவினைவாத குழுக்களுடன் மாவோயிஸ்டுகள் கை கோர்த்து இருப்பதாகவும் கூறப்பட்டது.

மத்திய உளவு அமைப்பின் தகவல்படி, ஆந்திரா, ஒரிசா, ஜார்க்கண்ட், சத்தீஸ்கர், மேற்குவங்கம், பீகார், மத்திய பிரதேசம் மாநிலங்களில் மட்டுமே காலூன்றி இருந்த மாவோயிஸ்டுகள் இப்போது இந்தியாவின் பெரும்பான்மை மாநிலங்களில் தங்களை வலுப்படுத்தி வருவதாக தெரிகிறது
.

No comments:

Post a Comment