Pages

Thursday, February 9, 2012

நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கையில் நம்பிக்கையில்லை: சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே!

Thursday, February 09, 2012
இலங்கை::கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவானது, எல்.ரி.ரி.ஈ. பயங்கரவாதத்தினால் பாதிக்கப்பட்டவர்களை முற்றாக மறந்துவிட்டது எனவும் அக்குழுவின் அறிக்கை பக்கச்சார்பற்றது அல்ல எனவும் கம்பஹா மாவட்ட ஐ.ம.சு.கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளேவின் விதவை மனைவியுமான டாக்டர் சுதர்ஷினி பெர்னாண்டோ புள்ளே கூறியுள்ளார்.

கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவில் நான் நம்பிக்கைகொள்ளவில்லை என்பதை நான் விசேடமாக குறிப்பிட வேண்டும். நாம் பாதிப்பட்டவர்களான போதிலும் எமது கருத்துக்களை அவர்கள் பெறவில்லை. அவர்கள் எல்.ரி.ரி.ஈ. பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டவர்களை அவர்கள் மறந்துவிட்டார்கள். அவர்கள் சர்வதேச அழுத்தங்களாலான தேவைகளை நிறைவேற்றுகிறார்கள் என நான் சந்தேகிக்கிறேன்' என அவர் கூறினார்.

அதேவேளை சர்வதேச சமூகமும் எல்.ரி.ரி.ஈ. பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டவர்களை முற்றாக மறந்துவிட்டது எனவும் சுதர்ஷினி பெர்னாண்டோ புள்ளே கூறினார்.' அவர்கள் எல்.ரி.ரி.ஈ.யினால் கொல்லப்பட்ட அப்பாவிகள் மற்றும் அரசியல் தலைவர்களை மறந்தவிட்டார்கள். தற்பொது அவர்களின் சொந்த தேவைகளுக்காக நாட்டில் ஸ்திரமின்மையை ஏற்படுத்த முயற்சிகிறார்கள். பயங்கரவாதத்தால் பாதிக்கப்ட்டவள் என்ற வகையில் சர்வதேச சமூகத்தின் நடத்தை குறித்து நான் விரக்தியடைந்துள்ளேன்' என அவர் கூறினார்.

எல்.ரி.ரி.ஈ. ஒழிக்கப்பட்டபோது சட்டவிரோத ஆயுத விற்பனையில் ஈடுபட்டிருந்தவர்கள் நஷ்டமடைந்தனர் எனவும் ஆக்குழுக்கள் தற்போது இந்நாட்டில் ஸ்திரமின்மையை ஏற்படுத்துவதற்கு ஆர்வம் கொண்டிருப்பபதாகவும் அவர் கூறினார்.

வடக்கிலுள்ள மக்கள் தற்போது ஆக்கபூர்வமான மகிழ்ச்சியான வாழ்க்கையை நோக்கிச் செல்லக்கூடிய நிலையில் இருப்பதாகவும் சர்வதேச சமூகம் நல்லிணத்துத்துக்கு இடையூறு ஏற்படுத்தாமல் அதற்கு உதவியாக இருக்க வேண்டும் அவர் கூறினார்.

'எல்.ரி.ரி.ஈ. ஆதரவாளர்கள் கூறுவதைக் கேட்காமல் நடுநிலையான மனதுடன் சூழ்நிலையை சர்வதேச சமூகம் நோக்க வேண்டும் என நான் வலியுறுத்துகிறேன். வடக்குக்கும் தெற்குக்கும் சென்று மக்கள் கூறுவதை கேளுங்கள். எல்.ரி.ரி.ஈ. இருண்ட நினைவுகளை ஒதுக்கிவிட்டு தமது வாழ்க்கையை முன்னெடுத்துச் செல்ல மக்கள் விரும்புகிறார்கள்' என அவர் கூறினார்.

No comments:

Post a Comment