Saturday, February 4, 2012

சிவனொளிபாதமலைக்குச் செல்லும் யாத்திரிகர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு!

Saturday, February 04, 2012
இலங்கை::சுதந்திர தின விடுமுறையுடன் கூடிய வார இறுதி நாட்கள் என்பதால் சிவனொளிபாதமலைக்குச் செல்லும் யாத்திரிகர்களின் எண்ணிக்கை இன்று அதிகரித்துள்ளது.

வாகன தரிப்பிடங்களிலும், நல்லத்தண்ணியிலிருந்து சுமார் ஒன்பது கிலோமீற்றர் தொலைவிலும் வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளதாக நல்லத்தண்ணி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அதிகளவான வாகனங்கள் நல்லத்தண்ணி நகருக்கு செல்வதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் கூறினார். சாரதிகள் ஒரு ஓடு தளத்தின் ஊடாக மாத்திரம் வாகனங்களை செலுத்துமாறு பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இம்முறை சிவனொளிபாதமலைக்கான யாத்திரை பருவக்காலம் ஆரம்பமான நாள் முதல் இன்றைய தினமே அதிகளவான யாத்திரிகர்கள் நல்லத்தண்ணி நகரை சென்றடைந்துள்ளனர்.

விடுமுறை நாட்களுடன் செவ்வாய்க்கிழமை பூரணை தினம் வருவதால் இலட்சக்கணக்கான யாத்திரிகர்கள் சிவனொளிபாதமலைக்கான யாத்திரையை மேற்கொள்வார்கள் என நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment