Pages

Sunday, February 12, 2012

கடல் எல்லையை மீறிய மூன்று இந்திய மீனவர்கள் கைது!

Sunday, February 12, 2012
இலங்கை::நாட்டின் கடல் எல்லைக்கு அத்துமீறி பிரவேசித்து மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட மூன்று இந்திய மீனவர்களை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

இவர்கள் நேற்றிரவு கைது செய்யப்பட்டதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் கொமாண்டர் கோசல வர்ணகுரசூரிய தெரிவித்தார்.

மீன்பிடி நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்பட்ட டோலர் படகுகளையும் கடற்படையினர் கைப்பற்றியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

குறித்த மீனவர்கள் வடபகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிளன்றது.

கைது செய்யப்பட்ட மதீனவர்களை கான்கேசன்துறை பொலிஸில் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் மேலும் குறிப்பிட்டார்.

திருகோணமலை குச்சவெளியில் விவசாயம் செய்த இந்திய பிரஜை கைது!

சுற்றுலா விசாவில் இலங்கை வந்து விவசாய நடவடிக்கையில் ஈடுபட்டு வந்த இந்திய பிரஜை ஒருவர் திருகோணமலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர் குச்சவெளி பகுதியில் வைத்து நேற்று கைது செய்யப்பட்டதாக குச்சவெளி பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபர் இன்று (12) திருகோணமலை நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்படவுள்ளார்.

No comments:

Post a Comment