Monday, February 6, 2012

டி.எம்.வி.பியுடன் கூட்டு இல்லை – த.தே.கூ!

Monday, February 06, 2012
இலங்கை::தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியுடன் இணைந்து தேர்தலில் போட்டியிட முடியாது என தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

(புலி)கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் இதனை எமது செய்திப்பிரிவுடன் இடம்பெற்ற தொலைபேசி உரையாடலின் போது குறிப்பிட்டார்...

பேச்சுவார்த்தைகளில் இருந்து, விலகி செல்ல அரசாங்கம் முயற்சி: (புலி)கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்-சுமந்திரன்!

வடக்கு கிழக்கு பிரதேசங்களுக்கு அரசியல் தீர்வு காணும் வகையில், இரண்டு தரப்பிற்கும் இடையில் நடைபெறும் பேச்சுவார்த்தைகளில் இருந்து, அரசாங்கம் விலகி செல்ல முயற்சித்து வருவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் குற்றம் சுமத்தியுள்ளார்.

ஜனவரி மாதம், அரசாங்கத்திற்கும், தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையில், பேச்சுவார்த்தை நடைபெறும் இடம் அறிவிக்கப்பட்டிருந்த போதிலும், அந்த ஒரு பேச்சுவார்த்தையில் கூட அரசாங்கம் கலந்துக்கொள்ளவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனினும் பலனளிக்கும் பேசசுவார்த்தையில் கலந்துக்கொள்வதற்காக அரசாங்கம் அழைப்பு விடுக்கும் என கூட்டமைப்பு எதிர்பார்த்துள்ளது. இந்த பேச்சுவார்த்தையில் ஏற்படுத்திக்கொள்ளப்படும் இணக்கப்பாடுகளின் அடிப்படையில், நாடாளுமன்ற தெரிவுக்குழுவிற்கு பிரதிநிதிகளை நியமிப்பது பற்றி தீர்மானிக்கப்படும்.

அரசியல் தீர்வு தொடர்பில் அரசாங்கத்துடன் இணக்கப்பாடு ஒன்றை ஏற்படுத்தி கொள்ளாமல், நாடாளுமன்ற தெரிவுக்குழுவிலோ, சர்வக்கட்சி குழுவிலோ கலந்துக்கொள்வதில் எந்த பயனுமில்லை. அரசியல் தீர்வு விடயத்தில் அரசாங்கம் ஒரு நிலைப்பாட்டில் இருந்து செயற்பட வேண்டும் என்ற போதிலும், துரஷ்டவசமாக அரசாங்கம், இந்தியாவிடம் ஒரு நிலைப்பாட்டையும், இலங்கையில் மற்றுமொரு நிலைப்பாட்டை வெளியிட்டு வருவது கவலைக்குரிய விடயம் எனவும் சுமந்திரன் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment