Sunday, February 5, 2012

பாடசாலை மாணவியை ஒருவரைக் கடத்திச் சென்று தடுத்து வைத்திருந்த முன்னாள் இராணுவ வீரர் ஒருவர் கைது!

Sunday, February 05, 2012
இலங்கை::12 வயதான பாடசாலை மாணவியை ஒருவரைக் கடத்திச் சென்று தடுத்து வைத்திருந்தார் என்ற சந்தேகத்தின் பேரில் முன்னாள் இராணுவ வீரர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.கடந்த 31 ஆம் திகதி குறித்த மாணவி பாடசாலைக்குச் சென்று கொண்டிருந்த போது முச்சக்கர வண்டியில் வந்த இந்த முன்னாள் படைவீரர் அவரைக் கடத்திச் சென்று ரத்தோட்டை பிரதேசத்திலுள்ள வனப் பிரதேசத்தில் தடுத்து வைத்துள்ளார்.

இந்தக் கடத்தல் தொடர்பான தகவல் மஹவெல பொலிஸாருக்குக் கிடைத்ததனையடுத்து குறிப்பிட்ட முச்சக்கர வண்டியின் உரிமையாளர், ஓட்டுநர் ஆகியோர் கைது செய்யப்பட்டு அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போது குறித்த மாணவி தடுத்து வைக்கப்பட்டுள்ளமை தெரிய வந்தது.

இதனையடுத்து அங்கு விரைந்த பொலிஸார் மாணவியை மீட்டதுடன் முன்னாள் இராணுவ வீரரையும் கைது செய்துள்ளனர்.

ஹிரோயின் கடத்தல் முறியடிப்பு!

ஹிரோயின் போதைப் பொருளை தம் வசம் வைத்திருந்த ஒருவரை, கண்டி காவல்துறையினர் நேற்று கைது செய்துள்ளனர்.

கைதி செய்யப்பட்ட நபரிடம் இருந்து 160 மில்லி கிராம் ஹிரோயின் கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

கண்டி நகரில் சந்தேகத்திற்கு இடமான முறையில் நடமாடிய ஒருவரை விசாரித்த போது இது கைப்பற்றப்பட்டது.

இவர் சிறிய பொலித்தீன் பை ஒன்றினுள், இந்த போதை வஸ்தை வைத்து தமது தொண்டையினுள் வைத்திருந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment