Pages

Saturday, February 4, 2012

காங்கிரஸ் பொதுச்செயலாளர் ராகுல்காந்திக்கு கூடுதல் பாதுகாப்பு: உளவுத்துறை கடிதம்!

Saturday, February 04, 2012
புதுடெல்லி::உத்தரபிரதேச சட்ட சபைக்கு 7 கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. அங்கு மீண்டும் ஆட்சியைக் கைப்பற்ற வேண்டும் என்ற நோக்கத்துடன் காங்கிரஸ் பொதுச்செயலாளர் ராகுல்காந்தி தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார்.

உத்தரபிரதேசத்தில் பெரும்பாலான இடங்களில் ராகுல்காந்திக்கு வரவேற்பு கிடைத்தாலும், சில இடங்களில் எதிர்ப்பும் காணப்பட்டது. குறிப்பாக 2 இடங்களில் அவருக்கு பொதுமக்கள் கறுப்புக்கொடி காட்டினார்கள். இதற்கிடையே பொதுக் கூட்டங்களில் ராகுல்காந்தி போலீஸ் பாதுகாப்பை அடிக்கடி மீறிச் சென்று மக்களை சந்தித்தார். வாக்காளர்களை கவர்வதற்காக அவர் மக்களை நெருங்கிச் செல்கிறார். ஆனால் பாதுகாப்பு கொடுக்கும் போலீஸ்காரர்களுக்கு இது சங்கடத்தை ஏற்படுத்துகிறது.

இந்த நிலையில் உளவுத்துறையில் உள்ள வி.ஐ.பி.க்கள் பாதுகாப்புப் பிரிவைச் சேர்ந்தவர்கள் ராகுல் காந்தியின் பாதுகாப்பு விஷயத்தில் கவலை தெரிவித்து அரசுக்கு கடிதம் எழுதி உள்ளனர்.

ராகுல்காந்திக்கு ஏற்கனவே தீவிரவாதிகளால் அச்சுறுத்தல் உள்ள நிலையில் அவர் மக்களை நெருங்கி செல்ல கூடாது என்று வற்புறுத்தி உள்ளனர். இதையடுத்து உத்தர பிரதேச மாநில உயர் போலீஸ் அதிகாரிகளை, மத்திய பாதுகாப்பு படை அதிகாரிகள் சந்தித்து பேசினார்கள். அதில் ராகுல்காந்திக்கு கூடுதல் பாதுகாப்பு கொடுக்கவும், மத்திய-மாநில பாதுகாப்புப்படைகள் ஒருங்கிணைந்து செயல்படவும் முடிவு எடுக்கப்பட்டது.

இது தவிர ராகுல்காந்தி பங்கேற்க செல்லும் பொதுக் கூட்டங்களில் மக்களோடு மக்களாக சாதாரண உடையில் போலீஸ்காரர்களை பணியில் ஈடுபடுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment