Pages

Monday, February 6, 2012

கூடங்குளம் உதயகுமார் மீது முதல்வர் தனிப்பிரிவில் புகார்!

Monday, February 06, 2012
சென்னை::இளைஞர் காங்கிரஸ் முன்னாள் நிர்வாகி இளையான்குடி சபீர்அலி தலைமை செயலகத்தில் உள்ள முதல்வர் தனிப்பிரிவு அலுவலரிடம் இன்று அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது: கூடங்குளம் அணுமின் நிலையம் சுமார் 13,500 கோடி செலவில் கட்டப்பட்டு, தற்போது திறக்கும் தருவாயில் உள்ளது. இந்நிலையில், சிலரது தூண்டுதலின் பேரில், கூடங்குளம் எதிர்ப்பு ஒருங்கிணைப்பு குழு என்ற அமைப்பு மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்த அமைப்பு உதயகுமார் என்பவர் தலைமையில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

மத்திய அரசு குழு அமைத்து பேச்சுவார்த்தை நடத்தியும், முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் அணுஉலையால் எந்த பாதிப்பு இருக்காது என தெரிவித்தும் போராட்டத்தை தொடர்கின்றனர். உதயகுமார் மீது 164 வழக்குகள் பதிவு செய்யப்பட்டும் இன்னும் கைது செய்யப்படவில்லை. உதயகுமார் மற்றும் அவரை சார்ந்தவர்களை உடனடியாக தேச துரோக வழக்கில் கைது செய்ய முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட வேண்டும். இவ்வாறு சபீர் அலி கூறியுள்ளார்.

No comments:

Post a Comment