Friday, February 03, 2012இலங்கை::ஜயவர்தனபுர மாணவர் ஒருவர் கடத்தப்பட்டு தாக்கப்பட்ட நிலையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
நேற்று இரவு 11.15 மணியளவில் பல்கலைக்கழகத்திலிருந்து தனது தங்குமிடத்துக்கு செல்லும் வழியில் இவர் கடத்தப்பட்டுள்ளார்.
பல்கலைக்கழகத்தின் இரண்டாம் வருடத்தில் கல்வி பயிலும் இம்மாணவன் மாணவர் சங்க பிரதிநிதி எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
நேற்று பகல் வேளையில் இரு மாணவ தரப்பினருக்கிடையில் கைக்கலப்பு இடம்பெற்றுள்ளது. இதன் பின்னணியிலேயே குறித்த மாணவன் கடத்தப்ட்டு தாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தாக்குதலுக்கு இலங்கான மாணவன் தற்போது களுபோவில வைத்தியசாலையில் அனுமதிப்பட்டுள்ளார்.
No comments:
Post a Comment