Pages

Friday, February 10, 2012

யாழ் நிலமை குறித்து ஐக்கிய அமெரிக்க குழுவினருக்கு விளக்கம்!

Friday, February 10, 2012
இலங்கை::யாழ்ப்பாணத்தின் தற்போதைய நிலைகுறித்து அறியும் முகமாக, ஐக்கிய அமெரிக்க வெளியுறவுத்துறை மற்றும் ஐக்கிய அமெரிக்க தூதரகத்தைச் சேர்ந்த நான்கு பேரைக் கொண்ட குழுவொன்று கடந்த பெப்ரவரி 8ஆம் திகதி பலாளியில் வைத்து யாழ் கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹதுருசிங்கவை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

இச் சந்திப்பில், யுத்தத்திற்கு பின்னர் அரசாங்கத்தால் மேற்கொள்ளப்படும் நல்லிணக்கச் செயற்பாடுகளில் இராணுவத்திணரின் பங்கெற்பு குறித்தும், யாழ்பாணத்தின் தற்போதய நிலைகுறித்தும் மேஜர் ஜெனரல் ஹதுருசிங்கவால் தெளிவாக விளக்கப்பட்டது.

இதைத்தவிர பொதுமக்களுக்கான வீடமைப்புத்திட்டங்கள், மாணவர்களுக்கான புலமைபைரிசில் திட்டங்கள், சுகாதார அபிவிருத்தித் திட்டங்கள் மற்றும் புதிதாத மீள்குடியமர்த்தபட்ட மக்களுக்கான மனிதாபிமான உதவிகள் போன்ற நலன்புரி சேவைகள் தொடர்பாகவும் அவர்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது.

விசேடமாக புனர்வாழ்வளிக்கப்பட்டு சமூகத்துடன் இணைக்கபட்ட முன்னாள் புலி உறுப்பினர்களுக்கு தொழில் வாய்பை எற்படுத்தும் முகமாக மேற்கொள்ளப்ட்ட நடவடிக்கைகள் குறித்தும் விளக்கப்பட்டது.

இக்குழுவில் ஐக்கிய அமெரிக்க வெளியுறவுத்துறை தூதுவர் ஸ்டீபன் ஜே ரேப். விசேட உதவியாளர் திரு. டீன் கப்லன், ஐக்கிய அமெரிக்க தூதரகத்தின் அரசியல் துணை தலைவர் கிற்ஸ்டோபர் கனிங் மற்றும் அரசியல் நிபுணர் பட்மினி ராஜாதுறை ஆகியோர் பங்கேற்றிருந்தனர்

No comments:

Post a Comment